Viral Video: மிரட்டிய பெண் சிங்கம்.. அடங்கிப் போன ஆண் சிங்கம்!

காட்டு ராஜாவான சிங்கத்தின் கர்ஜனையை கேட்டாலே நமக்கெல்லாம் திகில் ஏற்படும். காட்டில் உள்ள மற்ற விலங்குகள் எல்லாம் அதன் சத்தம் கேட்டாலே  அடங்கிவிடுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2023, 06:33 PM IST
  • காட்டு வாழ்க்கையை விவரிக்கும் வீடியோக்கள் எளிதில் வைரலாகின்றன.
  • காட்டிற்கு ராஜா ஆனாலும் வீட்டிற்கு அடங்கி தான் ஆக வேண்டும்.
  • காட்டு ராஜாவான சிங்கத்தின் கர்ஜனையை கேட்டாலே நமக்கெல்லாம் திகில் ஏற்படும்.
 Viral Video: மிரட்டிய பெண் சிங்கம்.. அடங்கிப் போன ஆண் சிங்கம்! title=

காட்டு வாழ்க்கை மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்களை கொண்ட வாழ்க்கை. அதனால் தான் காட்டு வாழ்க்கையை விவரிக்கும்  வீடியோக்கள் எளிதில் வைரலாகிண்றன. இணையத்தில்  தினமும் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இணையத்தில், சிங்கம், புலி சிறுத்தை போன்ர விலங்குகளில் வீடியோக்களுக்கு அதிக மவுசு உள்ளது. 

காட்டு ராஜாவான சிங்கத்தின் கர்ஜனையை கேட்டாலே நமக்கெல்லாம் திகில் ஏற்படும். காட்டில் உள்ள மற்ற விலங்குகள் எல்லாம் அதன் சத்தம் கேட்டாலே  அடங்கிவிடுகின்றன. சிங்கத்தின் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணமாகத்தான் அது காட்டின் ராஜாவாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து விலங்களும் சிங்கத்தை கண்டு அஞ்சி ஓடி விடும். யானை போன்ற சில விலங்குகள் மட்டுமே அதனை வலுவாக எதிர் கொள்ளும்.  ஆனால், காட்டிற்கு ராஜா ஆனாலும் வீட்டிற்கு அடங்கி தான் ஆக வேண்டும். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் காணப்படுகின்றன. ஆண் சிங்கம் பெண் சிங்கத்தின் அருகில் சென்ற உடன் பெண் சிங்கம் சீறிப் பாய்கிறது. 

காட்டு விலங்குகள் துணையை கூட நினைக்கும் போது தங்கள் துணையை கடிக்கின்றன. சிங்கங்கள் அதில் வேறுபட்டவை அல்ல. கடித்தல் அல்லது விளையாட்டுத்தனமாக சீண்டுவதன் மூலம் தங்கள் இனச்சேர்க்கை நோக்கத்தை தெரிவிக்க முனைகிறார்கள். இருப்பினும், பெண் சிங்கம் மனநிலையில் இல்லாதபோது, ​​தொந்தரவு செய்வதை விரும்பாமல் இருக்கலாம். இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெண் சிங்கங்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதைத் தெளிவாகக் காணலாம்.

பெண் சிங்கதிடம் சிக்கிய ஆண் சிங்கத்தின் வீடியோ:

 

 

ஆண் சிங்கத்தின் மேல் பெண் சிங்கம் கோபப்பட்ட விதம் உண்மையிலேயே பீதியை வரவழைக்கிறது. ஆண் சிங்கம் பெண் சிங்கம் தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ BigDaddyCmoe @habsolutely12 என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களையும், ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!

சமீபத்தில் சில நாட்களுக்கு முன், தவளை  ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ ஒன்றும் வைரலானது. பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். பாம்பின் பெயரை கேட்டால் நூறு காத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். சுமார் 2 நிமிடங்கள் நீடித்த அந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருந்தது. இந்த வீடியோவில் தவளை மெதுவாக பாம்பை ரசித்து ருசித்து பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதைக் காணலாம். இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News