Arabic Kuthu Challenge: விமான நிலையத்தில் விஜய்யின் ஹலமிதி ஹபிபோ பாடலுக்கு நடனமாடும் சமந்தா

'அரேபிய குத்து சவால்' நடன சேலஞ்சில் சமந்தாவின் கலக்கல் நடனம் வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2022, 09:30 AM IST
  • 'அரேபிய குத்து சவால்' நடன சேலஞ்சில் சமந்தாவின் கலக்கல் நடனம்
  • சமந்தாவின் ஏர்போர்ட் குத்து டான்ஸ் வைரல்
  • விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் நடனமாடி அசத்திய சமந்தா
Arabic Kuthu Challenge: விமான நிலையத்தில் விஜய்யின் ஹலமிதி ஹபிபோ பாடலுக்கு நடனமாடும் சமந்தா  title=

புதுடெல்லி: நடிகை சமந்தாவின் ‘ஓ சொல்றியா மாமா’ ஐட்டம் சாங் மிகவும் பிரபலமானது. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த பாடலுக்கு நடனமாடும் சமந்தா மிகவும் பிரபலமான நடிகை.

அவரது பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களை பதிவேற்றி வரும் நிலைய்ல், அவர் நடிகர் விஜயின் பாடலுக்கு நடனமாடும் வீடியோ  (Viral Video) சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வரும் சமந்தா, தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுகிறது.  

விமானப் பயணத்திற்காக விமானநிலையத்தில் காத்திருந்தபோது, சமந்தா இந்த டான்ஸ் வீடியோவை எடுத்துள்ளார்.

இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது, காத்திருப்பது கடினமானது என்பதால், அவர் தனக்கு பிடித்தமான நடனத்தை, அதுவும் பிரபலமான தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டேயின் பீஸ்ட் படத்தின் ஹலமிதி ஹபிபோவின் பிளாக்பஸ்டர் பாடலை சமந்தா கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும் படிக்க | 'ஓ சொல்றியா' பாட்டு பாக்க ஆசையா?

திடீரென உற்சாகமான சமந்தா, அந்த பாடலுக்கு நடமனாடி, அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

டெனிம் ஜாக்கெட் அணிந்து, சாம்பல் நிற பஸ்டியர் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து, சமந்தா (Samantha Ruth Prabhu) ஆடும் இந்த விமான நிலைய வீடியோ  கலக்கலாக இருக்கிறது.  

பீஸ்ட் தயாரிப்பாளர்களின் 'அரபு குத்து சவால்' சேலஞ்சுக்காக பல ரசிகர்கள் தங்கள் சொந்த நடனப் பதிப்புகளின் வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | 'ஓ சொல்றியா மாமா...' மாஸாக டான்ஸ் ஆடி கேட்ட மணமகள்,

பீஸ்ட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் எழுதி இயக்கியிருக்கிறார். தமிழ் பிளாக் காமெடி அதிரடி திரில்லர் திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல், சதீஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பிஜோர்ன் சுர்ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தளபதி விஜய்யின் பீஸ்ட் ஏப்ரல் 14, 2022 அன்று புத்தாண்டு அன்று திரைக்கு வருகிறது.

மேலும் படிக்க | அணைக்கட்டு மீது தனியாக நடக்கும் குழந்தை - பதைபதைக்க வைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News