WATCH: ஹிர்திக் ரோஷன் வெளியிட்ட புதிய உடற்பயிற்சி வீடியோ.....

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன்.

Last Updated : Apr 21, 2019, 02:30 PM IST
WATCH: ஹிர்திக் ரோஷன் வெளியிட்ட புதிய உடற்பயிற்சி வீடியோ.....  title=

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன்.

கஹோ நா பியார் ஹை மற்றும் கிரிஷ் போன்ற பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தவர் ரித்திக் ரோஷன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுடலை பேணி வருவதால் அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இந்நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவை  பதிவிட்ட ஹிர்திக் ரோஷன், 20 ஆண்டுகளுக்கு முன்பு உடற்பயிற்சியை செய்வது சற்று எளிதாக இருந்ததாகவும் தற்போது சிரமமாக இருப்பதாகவும் கூறி தனக்கு வயதாகி வருவதை சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற காதல் மனைவி சுசேன், இந்த வீடியோவை பார்த்து, "நீங்கள் 20 ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது இன்னமும் கவர்ச்சியாக தெரிகிறீர்கள்" என பதிவிட்டுள்ள கமென்ட் ஏராளமானோரை கவர்ந்துள்ளது.

 

Trending News