மனித நேயம் மிக்க செயல்; காக்கைகளிடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவி!

பிரியதர்ஷினி என்ற பத்தாம் வகுப்பு மாணவி காகங்கள் பிடியிலிருந்து பத்திரமாக ஆந்தையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2022, 02:31 PM IST
மனித நேயம் மிக்க செயல்; காக்கைகளிடம்  சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவி! title=

பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் உப்பு கிணறு வீதியை சேர்ந்த சுதர்சினி.   இவர் தன்வந்த், வருண், ஆகியோர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த இந்த மாணவர்கள்,  அவ்வழியாக பறந்து வந்த ஆந்தையை காகங்கள் துரத்தி துரத்தி கொத்திக் கொண்டிருந்ததை பார்த்தனர்.  சிறுவர்கள் உடனடியாக காக்கைகளை விரட்டி பாதுகாப்பாக மீட்கப் போராடினார். 

 

அப்பொழுது பிரியதர்ஷினி என்ற பத்தாம் வகுப்பு மாணவி காகங்கள் பிடியிலிருந்து பத்திரமாக ஆந்தையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். முன்னதாக ஆந்தைக்கு நீர் புகட்டி ஆழியார் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆந்தையை வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர். சிறுமியின் செயலைக் கண்டு இப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபரை துணிகரமாக மீட்ட ராணுவ வீரர்கள்: Watch Video

மேலும் படிக்க | இந்தியாவின் வினோத ரயில் நிலையம்: மத்திய பிரதேசத்தில் ‘பாதி’; ராஜஸ்தானில் ‘பாதி’...!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News