Viral Video: திட்டம் போட்டு திருடிய மனைவி; வசமாக சிக்க வைத்து சென்ற கணவன்... செம காமெடி

துணிக்கடை ஒன்றில் திட்டம் போட்டு திருடிய மனைவியை, வசமாக சிக்க வைத்துவிட்டு சென்ற கணவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 12, 2023, 07:20 AM IST
Viral Video: திட்டம் போட்டு திருடிய மனைவி; வசமாக சிக்க வைத்து சென்ற கணவன்... செம காமெடி title=

எத்தனை நாள் பிளான் போட்டு வைத்திருந்தாரோ தெரியவில்லை... மனைவி கூடவே சென்று திருட்டுக்கும் உடந்தையாக இருந்து, அவரை வசமாக சிக்க வைத்துவிட்டு சென்றுள்ளார் ஒருவர். கணவனின் இந்த வீடியோ இணையவாசிகளிடம் வைரலாகியுள்ளது. குடும்பத்தில் செய்த பிரச்சனைகளுக்கு எல்லாம், பழிவாங்க திட்டம்போட்டு இப்படி செய்துவிட்டோரோ? என்றெல்லாம் ஜாலியாக இணையவாசிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர். வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் துணிக்கடைகளில் இருந்து துணிகளை பில் போடாமல் தூக்கி வந்து, அவசர அவசரமாக கார் கதவை திறக்க முயற்சி செய்கிறார். 

மேலும் படிக்க | OMG Video: ஏலே ஊர் பக்கம் வந்துராதே! உன்னையும் ‘பிரியாணி’ போட்டுடுவாங்க! பாத்துக்கோ

அந்த நேரத்தில் கார் கதவு திறக்கிவில்லை. அதாவது, காருக்குள் இருந்த கணவன் கதவை லாக் செய்துவிட்டு திறந்துவிடவில்லை. இருவரும் ஒன்றாக தான் துணி வாங்க சென்றிருக்கிறார்கள். துணி வாங்கும்போது, துணியை திருடலாம் என்றும் பிளான் போட்டிருக்கிறார்கள். அப்படி செய்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து வந்து காரில் ஏறும்போது இப்படியொரு பிளானை செய்திருக்கிறார் கணவன். ஆனால், மனைவியான அந்த பெண்ணுக்கு இது தெரியவில்லை. எப்படியும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்தில் ஓடோடி வந்தபோது, கடைசி நேரத்தில் கணவன், கார் கதவை திறக்காமல் இருந்தது தான் டிவிஸ்ட்.

இப்படி மாட்டிவிடுவார் என தெரிந்திருந்தால் அந்த பெண் நிச்சயம் திருடியிருக்கவே மாட்டார். கடைசியில் கணவன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுவிட, ஓடியாவது தப்பித்துவிடலாம் என அந்த பெண் முயற்சி செய்கிறார். ஆனால், துணிக்கடையில் இருந்த செக்யூரிட்டி வேகமாக ஓடி வந்து அந்தப் பெண்ணை பிடித்து கைது செய்து அழைத்து செல்கிறார். இணையவாசிகளிடையே பிரபலமாக இருக்கும் இந்த வீடியோ, டிவிட்டரில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காக...ஸ்மார்டாக யோசித்து மனைவியை இப்படி சிக்க வைத்திருக்கிறார் என கிண்டலடித்துள்ளார்.

மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவர்! யானை மரத்தை சாய்த்த காரணம் தெரியுமா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News