NASA-விற்கு சாவல் விடும் நம்ம ஊர் விஞ்ஞானி Video!

ஆராய்சிகள் பல செய்து ராக்கெட்டுகளை ஏவி வரும் NASA-விற்கே சவால் விடும் வகையில் நம்ம ஊர் விஞ்ஞானி ஒருவர் ராக்கெட் விட்டுள்ளார்!

Last Updated : Aug 29, 2018, 01:26 PM IST
NASA-விற்கு சாவல் விடும் நம்ம ஊர் விஞ்ஞானி Video! title=

ஆராய்சிகள் பல செய்து ராக்கெட்டுகளை ஏவி வரும் NASA-விற்கே சவால் விடும் வகையில் நம்ம ஊர் விஞ்ஞானி ஒருவர் ராக்கெட் விட்டுள்ளார்!

திடகாத்திரமான நபர் ஒருவர் தனது வித்தியாசமான திறமையால் ராக்கெட் விட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ட்விட்டரில் @PyarSeMario என்னும் கணக்கில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் உள்ள நபர் தன் வாயில் இருக்கும் சிகரெட்டினை மட்டும் வைத்து நீளமான வெடி ராக்கெட்டுகளை ஏவுகின்றார். 9 ராக்கெட்டுகளை ஒரே சிகரெட்டில் பற்ற வைத்து, அதுவும் வாயில் இருந்து சிகரெட்டினை எடுக்காமல் பற்றவைத்து விண்ணில் ஏவும் காட்சி அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

இந்த வீடியோவில் இடம்பெற்ற நபர் குறித்த விவரங்கள் அறியிவில்லை. எனினும் இந்த வீடியோவில் ஒலிக்கும் பாடல், இச்சம்பவம் நிகழ்ந்துள்ள இடம் வடமாநிலமாக இருக்கலாம் என தெரிகிறது. தற்போது தீபாவளி திருநாள் வருவிருக்கும் நிலையில், இந்த புதுவித வெடிவெடிக்கும் முறை இணையத்தில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

இணையத்தை கலக்கி வரும் இந்த வீடியோ தற்போது உங்களுக்காக....

Trending News