viral: ஆண் நண்பருடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்

'ஒன்றாகச் சாப்பிடுபவர்கள், ஒன்றாக இருப்பார்கள்' என்ற கேப்ஷனுடன் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிரமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஸ்ருதியின் காதலன் என்று கூறப்படும் சாந்தானு ஹசாரிகா இருப்பதால் வீடியோ வைரலாகிறது...  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 11, 2021, 04:58 PM IST
  • ஸ்ருதி ஹாசனின் சிக்கன் வீடியோ வைரல்
  • ஆண் நண்பருடனுடன் பேசிக் கொண்டே சிக்கன் சாப்பிடும் வீடியோ
  • யூடியூப் ஆரம்பிக்க ஆலோசனை நடத்தும் ஸ்ருதி ஹாசன்
viral: ஆண் நண்பருடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன் title=

நடிகை ஸ்ருதி ஹாசன், அவரது ஆண் நண்பருடன் இருக்கும் ஒரு ஜாலி வீடியோவை பகிர்ந்துள்ளார். அது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. சாந்தானு ஹசாரிகா, ஸ்ருதியின் ஆண் நண்பர் மட்டுமல்ல, காதலன் என்றும் வதந்திகள் கூறுகின்றன.

அதை உண்மையாக்கும் வகையில், 'ஒன்றாகச் சாப்பிடுபவர்கள், ஒன்றாக இருப்பார்கள்' என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ளார் 

ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ, ஜாலியாக சிக்கன் சாப்பிடும் வீடியோ.  

சிக்கன் சாப்பிடும் போதும், தனக்கு பிடித்தமான பாடலை பாடுகிறார் ஸ்ருதி. இந்த வீடியோவில் தங்கள் மாலை நேரத்தை உணவுக்காக செலவிடுவதாக சாந்தனு சொல்கிறார். ஸ்ருதி ஒரு யூடியூப் சேனலைத் திறக்க வேண்டும் என்றும், அதில் தான் மெதுவாக சாப்பிடுவதை பதிவேற்ற வேண்டும் என்றும் சொல்கிறார். 

சாந்தனுவுக்கு சிக்கன் ஊட்டிவிடும் ஸ்ருதி, அவருக்கு கோழியை ஊட்டிவிடுகிறார். "நாங்கள் மிகவும் கம்பீரமாக இருக்கிறோம்" என்று கூறுகிறார். "ஒன்றாக சாப்பிடுபவர்கள், ஒன்றாக இருப்பவர்கள். இது உணவுடன் கூடிய ஒரு சாதாரண மாலை, நாங்கள் வறுத்த கோழியை விரும்பி சாப்பிடுகிறோம்" என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவிக்கிறார்.  

Also Read | நீருக்கடியில் மச்சக்கன்னியாக மாறிய ஸ்ருதிஹாசன்

ஹைதராபத் டைம்ஸின் 2020-ஆம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட பெண் டைட்டிலை வென்றவர் ஸ்ருதி ஹாசன். தமிழை விட தெலுங்கில் அதிகப் படங்களில் நடிக்கும் ஸ்ருதி தமிழில் எஸ்.பி.ஜனநாதனின் லாபம் திரைப்படத்தில் மட்டுமே தற்போது நடிக்கிறார்.

தெலுங்கில் இந்த வருடம் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த வருடம் வெளியான இன்னுமொரு தெலுங்கு திரைப்படம் ரவி தேஜாவின் க்ராக். இந்தியில் தி பவர் படத்திலும் நடித்த ஸ்ருதி, பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் சலார் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருக்கிறார். சாந்தானுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும்போது 'பிடித்த மனிதர்' என்று அழைத்தார்.

Also Read | தொற்றுநோய் காலத்தில் பெற்றோர் உதவி செய்யவில்லை- குற்றம் சுமத்தும் ஸ்ருதி ஹாசன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News