சுற்றி வளைத்த மலைப்பாம்பை வெச்சி செஞ்ச சிறுவன்: அரண்டு போக வைக்கும் Viral Video

Scary Snake Video: பார்த்த உடனே அச்சம் பற்றிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. தைரியம் இருந்தால் மட்டும் இதை பாருங்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 26, 2023, 04:44 PM IST
  • மலைப்பாம்புகளுடன் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதையும் அவற்றுடன் விளையாடுவதையும் சமீப காலங்களில் அதிகம் கண்டு வருகிறோம்.
  • இது பற்றிய பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன.
  • எனினும், இவை சில சமயம் ஆபத்தாகலாம் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
சுற்றி வளைத்த மலைப்பாம்பை வெச்சி செஞ்ச சிறுவன்: அரண்டு போக வைக்கும் Viral Video title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

பாம்பு, குரங்கு, நாய், பூனை, யானை ஆகிய மிருகங்களுக்கு சமூக ஊடகங்களில் அதிக மவுசு உள்ளது. இவற்றில் பாம்பு வீடியோகளுக்கென இனையவாசிகளுடன் தனி கிரேஸ் உள்ளது. பாம்புகள் மிகவும் கொடூரமான மற்றும் அதிகப்படியான ஆபத்தை விளைவிக்கக்கூடிய விலங்குகள். மனிதர்கள் பெரும்பாலும் பாம்புகளிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறார்கள். பாம்புகளுக்கு அருகில் அவ்வளவு எளிதாக சென்று விட முடியாது என்பதால், மர்மமான விலங்குகளான பமபுகளை இணையவாசிகள் சமூக ஊடகங்களில் அதிகம் காண விரும்புகிறார்கள். எனினும், சிலர் விளையாட்டுத்தனத்தால், அபாயத்தை பற்றி சிறிதும் கலவலைப்படாமல் இவற்றை அவ்வப்போது வம்பிழுக்கிறார்கள். 

மலைப்பாம்புகளுடன் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதையும் அவற்றுடன் விளையாடுவதையும் சமீப காலங்களில் பல வீடியோக்களில் அதிகம் கண்டு வருகிறோம். இது பற்றிய பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. எனினும், இவை சில சமயம் ஆபத்தாகலாம் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். 

சமீபத்தில் ஒரு பாம்பு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. இதை பார்த்தால், நமக்கு அச்சம், ஆச்சரியம், அதிசயம் என அனைத்தும் சேர்ந்து வரும். ஒரு மிகப்பெரிய மலைப்பாம்புடன் சிறுவன் ஒருவன் விளையாடும் வீடியோதான் இது. இது காண்பவர்களின் இதயத்தை நிற்கவே வைத்து விடுகிறது என்றே சொல்லலாம். 

வீடியோவின் ஒரு கட்டத்தில் சிறுவன் பாம்பிடம் சிக்கிக்கொண்டுள்ளது போல தோன்றுகிறது. ஆனால், அப்படி அல்ல, அந்த சிறுவன் தான் பாம்பை வம்புக்கு இழுக்கிறான் என்பது பின்னர் தான் புரிகிறது. ஒரு கட்டத்தில் பாம்பு சிறுவனை சுற்றி வளைத்துக்கொள்கிறது. ஆனால், அந்த சிறுவன் கத்திக்கொண்டே அதன் பிடியிலிருந்து விடுபடுகிறான். பின்னர் அது அங்கிருந்து செல்வதை பார்த்து, அதன் தலைப்பக்கம் வந்து, அதை கையால் எடுத்து பாடாய் படுத்துகிறான். இது காண்பவர்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றது. 

மேலும் படிக்க | என்ன கொடும சார் இது.. ஆசிரியர்கள் செய்ய வேண்டிய செயலா இது: ஷாக்கிங் வீடியோ வைரல்

நெஞ்சை பதற வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ பல்வெறு தளங்களில் பகிரப்பட்டுள்ளது. ட்விட்டரில் இந்த வீடியோ @ChildrenLife2 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் வந்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பலர் வீடியோ எடுத்தவர்களை விமர்சித்து வருகிறார்கள். ‘இந்த விபரீத விளையாட்டு தேவையா?’ என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். 'வீடியோ எடுப்பதற்காக குழந்தையை இப்படி ஆபத்துக்கு ஆளாக்காதீர்கள்' என பெற்றோருக்கு சிலர் அறிவுரை வழங்கியுள்ளார்கள். "இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள், பாம்பு என்ன தவறு செய்தது...? கிரகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் மதிக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்" என ஒரு பயனர் பாம்புக்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளார். இப்படி இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்துள்ளன. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | வேண்டாம்.. டான்ஸ் மட்டும் பண்ணாதே: கெஞ்சிய நாய்.. விடாது ஆடிய நபர், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News