Video: Kiki Challenge மூலம் இணையத்தை கலக்கும் விவசாயிகள்!

இணையத்தை உலுக்கி வரும் "Kiki Challenge" சவாலினை தெலுங்கானாவை சேர்ந்த இரண்டு கிராமத்து விவசாயிகள் சற்று வித்தியாசமாய் கையாண்டுள்ளனர்!

Last Updated : Aug 6, 2018, 03:33 PM IST
Video: Kiki Challenge மூலம் இணையத்தை கலக்கும் விவசாயிகள்! title=

இணையத்தை உலுக்கி வரும் "Kiki Challenge" சவாலினை தெலுங்கானாவை சேர்ந்த இரண்டு கிராமத்து விவசாயிகள் சற்று வித்தியாசமாய் கையாண்டுள்ளனர்!

பிரபல பாப் பாடகர் டார்க்கியின் 'In my feelings' என்னும் பாடல் தொடர்பான சவால்கள் இணைய பிரியர்களை தற்போது சுண்டி இழுத்துள்ளது. பாப் பாடகர் டார்க்கியின் Scorpion என்னும் இசை ஆல்பம் கடந்த மாதம் வெளியானது. இந்த இசை கோப்பில் இடம்பெற்றுள்ள 'In my feelings' என்னும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து இந்த பாடலுக்கு தொடர்பாகும் வகையில் "Kiki Challenge" அல்லது "In my feelings challenge" என்னும் பெயரில் இணையத்தில் ரசிகர்கள் புது சவால் ஒன்றினை அறிமுகம் செய்தனர். அதாவது... இந்த பாடலினை வாகனத்தில் ஒலிக்க வைத்துவிட்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து நடனமாடிக்கொண்டு வானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பது தான்.

இந்த சவாலினை பிரபலங்கள் பலரும் முன்னெடுத்து செய்து வரும் நிலையில், இணைய ரசிகர்கள் சிலர் பழைய பாடல்களுக்கு இந்த Kiki பாடலின் ஒலியினை பின்இணைத்து பரப்பி வருகின்றனர்

இந்நிலையில் தற்போது தெலுங்கானாவை சேர்ந்த விவசாயிகள் இருவர், உழவிற்கு உதவும் ஏர்கலப்பையினை கொண்டு இந்த சவாலினை செய்து முடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் MyVillegeShow என்னும் பெயரில் இருக்கும் நண்பர்கள் குழு இந்த வீடியோவினை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Trending News