காதலுக்காக என்ன செய்யலாம்? 2000 கோடி ரூபாயை வேண்டாம் என்று சொன்ன காதலி!

Love Is All: காதலுக்காக என்னவெல்லாம் செய்யலாம்? 2500 கோடி மதிப்பிலான சொத்தை துறந்து சாமானியனை திருமணம் செய்த பெண்ணின் நவீனக் காதல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 3, 2024, 09:26 AM IST
  • சாமானியனை திருமணம் செய்த பெண்ணின் நவீனக் காதல்
  • காதலனை கரம் பிடிக்க சொத்துக்களை இழந்த பெண்
  • பணமே எல்லாமா? காதலுக்கு ஜே சொல்ல ரெடியா?
காதலுக்காக என்ன செய்யலாம்? 2000 கோடி ரூபாயை வேண்டாம் என்று சொன்ன காதலி! title=

2500 கோடி மதிப்பிலான சொத்தை துறந்து சாமானியனை திருமணம் செய்த பெண் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறார். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்டக் காதலை பெற்றோர் ஏற்க மறுத்ததால் 2500 கோடி ரூபாய் சொத்து வேண்டாம் என்று சொன்ன பெண்ணின் நவீன காதல் கதை தற்போது அனைவராலும் ஆச்சரியமாக பேசப்படுகிறது. இந்த காதல் தேவதையின் பெயர் ஏஞ்சலின் பிரன்சிஸ்.

காதலர்கள் அனைவருமே கல்யாணம் செய்வதற்காக தியாகம் செய்கின்றார்களா என்ற கேள்விக்கு இல்லை என்பது பதிலாக இருக்கலாம். ஆனால், சிலர் காதலை, திருமண உறவாக மாற்ற ஏதோவொரு தியாகத்தைச் செய்கின்றனர். வாழ்க்கையின் பெரும்பாலானவற்றை இழந்து, வாழ்க்கைக்குக் காதல் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வரும் மனிதர்கள் ஆச்சரியப்படுத்தலாம். ஆச்சரியம் என்பது கேட்பவர்களுக்கு என்றால், குடும்பத்தினருக்கு அதிர்ச்சி தான்... 

சாதாரண குடும்பங்களிலேயே காதல் பல கலவரங்களை உருவாக்கிவிடும் என்றால், பணக்காரர்கள் மற்றும் அரசு குடும்பங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? 

மேலும் படிக்க | தம்பதிகளுக்கான டிப்ஸ்: சண்டையின் போது ‘இந்த’ விஷயங்களை தப்பித்தவறிகூட பேசிடாதீங்க!

ஏஞ்சலின் பிரான்சிஸ் வணிக அதிபரான கூ கே பெங் மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் ஆகியோரின் மகள்.  ஆக்ஸ்போர்டில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, ஜெடியா பிரான்சிஸ் என்பவரை சந்தித்தார். இருவருக்கும் மனம் ஒத்துப்போக, காதல் மலர்ந்தது. காதலனை கைப்பிடிக்க நினைத்தபோது தான், பிரச்சனை வெடித்தது.

உண்மையான காதல், அன்புக்குரியவருடன் இருக்க எதையும் தியாகம் செய்யும் என்பதை உணர்த்கிறது என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஏஞ்சலின் பிரான்சிஸ் தொழில் அதிபரின் வாரிசு. மிகப் பெரிய பணக்காரரின் மகள்.

வணிக அதிபரான கூ கே பெங் மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் ஆகியோரின் மகளாக இருந்ததால் காதலா பணமா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க | ஈரோடு: காதல் மனைவி கொலை... கணவனின் நாடகத்தை கண்டுபிடித்த காவல்துறை

ஏஞ்சலினின் தந்தை கோரஸ் ஹோட்டல்களின் இயக்குனர். மலேசியாவின் 44வது பணக்காரர். அவரால், சாமானியரான ஒருவரை மருமகனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏஞ்சலினின் குடும்பத்தினர் காதலை மறுத்ததால், பிரச்சனை பூதாகரமானது. இறுதியில் குடும்பமா இல்லை காதலா என்ற கேள்வி வந்தபோது, காதலித்தவர் தான் வேண்டும் என்று ஏஞ்சலின் உறுதியாக இருந்தார். 

சொத்து வேண்டாம் என்று தந்தையிடம் சொல்லிவிட்டு காதலனை கரம் பிடித்த மலேசிய வாரிசு ஏஞ்சலின் பிரான்சிஸ் இதற்காக 2008இல் கொடுத்த விலை 2500 கோடி ரூபாய்கள். "அன்பு அனைத்தையும் வெல்லும்" என்பதை நிரூபித்த ஏஞ்சலின் ஆடம்பர வாழ்க்கையை மறுத்து, ஜெடியா பிரான்சிஸை மணந்தார்.
 
காதலுக்காக பெண்கள் குடும்பத்தை துறந்து, சொத்து சுகத்தை இழப்பது இது முதல் முறையல்ல. 2021 இல், ஜப்பானின் இளவரசி மாகோ கெய், தன்னுடைய கல்லூரி காதலன் மற்றும் ஒரு சாமானியனான கொமுரோவாவை மணந்தார். காதலுக்காக இளவரசி பட்டத்தை கைவிட்டார் ஜப்பானிய பேரரசரின் குடும்ப வாரிசு மாகோ. 

மேலும் படிக்க | ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் தவறான காதல் உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News