கத்தியால் குத்திக்குவேன் கதறிய மீரா மிதுன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Meera Mithun arrested: பட்டியலின மக்கள் குறித்து அவதூறு  கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகை மீரா மிதுனை, சென்னை சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2021, 05:20 PM IST
கத்தியால் குத்திக்குவேன் கதறிய மீரா மிதுன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ! title=

Meera Mithun arrested: பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனையடுத்து நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த 11 ஆம் தேதி நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், நடிகை மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமல், அதற்கு உரிய விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை மீரா மிதுனை (Meera Mithun arrested) கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 

அப்போது நடிகை மீரா மிதுன் தன்னை காவல்துறையினர் டார்ச்சர் செய்வதாகவும், தன்னை தொட்டால் இங்கேயே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்வேன் எனவும், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, தமிழ்நாடு போலீஸ் கொடுமை படுத்துவதாக கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

ALSO READ | Derogatory comments: நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News