ஆபாச படங்களில் நான் நடிக்கவில்லை -மனம் திறக்கும் மியா கலீஃபா!

முன்னாள் ஆபாச திரைப்பட நடிகை மியா கலீஃபா, தான் ஆபாச திரைப்பட துறையில் இருந்த காலத்தில் மொத்தம் $12,000 (ரூ. 8.5 லட்சம்) மட்டுமே சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 16, 2019, 11:08 AM IST
ஆபாச படங்களில் நான் நடிக்கவில்லை -மனம் திறக்கும் மியா கலீஃபா! title=

முன்னாள் ஆபாச திரைப்பட நடிகை மியா கலீஃபா, தான் ஆபாச திரைப்பட துறையில் இருந்த காலத்தில் மொத்தம் $12,000 (ரூ. 8.5 லட்சம்) மட்டுமே சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார்!

ஆபாச திரைப்பட நட்சத்திரங்களில் மிகவும் அறியப்பட்ட நபர்களில் ஒருவர் மியா கலீஃபா. இந்தத் தொழிலில் இவர் மூன்று மாதங்கள் மட்டுமே பணியாற்றினார், ஆனால் இன்னும் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாகவே இருந்து வருகிறார், மேலும் 2018 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட வயது வந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டில் கலீஃபா மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார், அதாவது அவர் தோன்றிய படங்களில் ஒன்று அவர் ஹிஜாப் அணிந்திருப்பதைக் காட்டியது. இதனையடுத்து ISIS அமைப்பினரிடன் இருந்தும் இவருக்கு மரண அச்சுறுத்தல் விடப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஆபாச திரைப்பட உலகின் தவறான எண்ணங்களை அவர் தெளிவுபடுத்தினார்.

இதுகுறித்து அவர் மனம் திறக்கையில்., "ஆன்லைனில் உலவும் நிறைய விஷயங்கள் தவறானவை. பெரும்பாலோர் இன்னும் நான் ஆபாச திரைப்படத்தில் நடிக்கிறேன் என கூறுகிறார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் எந்த ஆபாச திரைப்படத்திலும் நடிக்கவில்லை" என தெரிவித்துள்ளார். இதனுடன், அவர் தனது குறைகால ஆபாச தொழில்துறையில் எவ்வளவு சம்பாதித்தார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆபாச தொழிலில் ஈடுப்பட்டவர்கள் அனைவராலும் இத்துறைக்கு பின் பிராகாசித்துவிட முடிவதில்லை. அதற்கு நானே ஒரு உதாரணம். நான் அந்த தொழிலில் மில்லியன் கணக்கில் சம்பாதித்தாக பலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் நான் சம்பாதித்தது,  $12,000 (ரூ. 8.5 லட்சம்) மட்டுமே, அதன் பிறகு மீண்டும் ஒரு பைசா கூட பார்த்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News