தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாலிவுட் பிரபலம்!

பாலிவுட் நடிகர், மாடல் மிலிந்த் சோமன் இன்று 53-வது வயதில் காலடி எடுத்து வைக்கின்றார். இவரது பிறந்தநாளுக்கு இவரே வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Nov 4, 2018, 01:21 PM IST
தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாலிவுட் பிரபலம்!
Pic Courtesy: twitter/@milindrunning

பாலிவுட் நடிகர், மாடல் மிலிந்த் சோமன் இன்று 53-வது வயதில் காலடி எடுத்து வைக்கின்றார். இவரது பிறந்தநாளுக்கு இவரே வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில், சரத்குமார் -ஜோதிகா நடிப்பில் உருவான படம் 'பச்சைக் கிளி முத்துச்சரம்'. இப்படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். நடிகராக இருந்தாலும், மிலிந்த் சோமன் ஒரு மாடலாகத்தான் பெருமளவில் அறியப்படுகிறார். இதன் காரணமாக 53 வயதிலும் ஃபேஷன் துறையில் முன்னணி மாடலாக அவர் வலம் வருகிறார்.

தனது 52-வது வயதில் இவர் தனது மகள் வயது உள்ள அங்கிதா என்கிற 26 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் காதல் திருமணத்தில் முடிய இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை வெறுப்பேத்தி வந்தனர். முதலில் திருமண புகைப்படம் பின்னர் தேனிலவு புகைப்படம் என தொடர்சியாக புகைப்படங்களை இத்தம்பதியினர் வெளியிட்டு வந்த திரையுலக ரசிகர்களின் கவனத்தினை தங்களது பக்கம் ஈர்த்து வந்தனர்.

Happy birthday to m 

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

இந்நிலையில் தற்போது மிலிந்த் சோமன் தனது பிறந்தநாளுக்கு தானே வாழ்த்து தெரிவித்து வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார்.