தல ஆனாலும் சரி, மனைவி-னு வந்தா இப்படி தான் மாறுவாங்க...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, தனது மனைவி சாக்ஷி டோனியின் காலணியை சரிசெய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Dec 16, 2018, 04:57 PM IST
தல ஆனாலும் சரி, மனைவி-னு வந்தா இப்படி தான் மாறுவாங்க... title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, தனது மனைவி சாக்ஷி டோனியின் காலணியை சரிசெய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

கிரிக்கெட் களம், குடும்ப பொறுப்பு என இரண்டிலும் மேம்பட்டவராக திகழ்பவர் டோனி. இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இத்தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோனி தன் குடும்பத்தாருடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

You paid for the shoes so you tie them tooo !! Photo Credit - @k.a.b.b.s

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

இந்நிலையில் டோனி தனது மனைவி சாக்ஷி டோனியுடன் வெளியே சென்றுள்ள தருணத்தின் புகைப்படங்களை சாக்ஷி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களானது தற்போது வைரலாகி வருகின்றது. காரணம் இந்த புகைப்படங்களில் டோனி, தனது மனைவியின் காலணியினை சரிசெய்து விடுகின்றார். இந்த புகைப்படம் டோனியின் ரசிகர்கள் பலரை கோபமூட்டி இருந்தாலும், பலர் இந்த புகைப்படங்கள் டோனியின் மென்மை தன்மையினை வெளிக்காட்டுகிறது என பாராட்டி வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சாக்ஷி வேடிக்கையாக "காலணியினை வாங்கி கொடுத்தது நீங்கள் தானே, அப்போது காலணியை சரி செய்யவேண்டியது நீங்கள் தான்!" என குறிப்பிட்டு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

Trending News