குழந்தையாய் மாறி பனிக்கட்டியில் விளையாடும் பாண்டாக்கரடி! க்யூட்டான வீடியோ!

பாண்டாக்கரடி ஒன்று பனிபொழிவில் பனிக்கட்டிகளுக்கிடையே குழந்தை போல விளையாடும் க்யூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

Written by - RK Spark | Last Updated : Nov 27, 2022, 10:49 AM IST
  • பனியில் உருண்டு விளையாடும் பாண்டா.
  • குழந்தை போல மகிழ்ச்சியாக விளையாடுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
குழந்தையாய் மாறி பனிக்கட்டியில் விளையாடும் பாண்டாக்கரடி! க்யூட்டான வீடியோ! title=

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான விலங்கினங்களை பிடிக்கும் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும் ஒவ்வொரு வகையான விலங்குகளை செல்லமாக வளர்த்து வருகின்றனர்.  ஆனால் சிலருக்கு பிடித்தமான விலங்குகளை வீட்டில் வைத்து வளர்க்க முடியாது, ஏனெனில் சிலருக்கு மான் பிடிக்கும், சிலருக்கு யானை பிடிக்கும், சிலருக்கு பாண்டாகரடிகள் பிடிக்கும்.  ஆனால் இந்த விலங்குகளை எல்லாம் வீடுகளில் வைத்து வளர்க்க முடியாது, அதனால் இணையத்தில் பகிரப்படும் இதுபோன்ற விலங்குகளின் வீடியோக்களை கண்டு அவர்கள் ரசிக்கின்றனர்.  பெரும்பாலான மக்களுக்கு பாண்டாகரடிகள் பிடித்தமானதாக இருக்கும், அவை செய்யும் குறும்புத்தனங்கள் பார்ப்பதற்கு குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களை போன்றே தான் இருக்கும்.

மேலும் படிக்க | நாய்குட்டிகளிடம் மாட்டிக்கொண்ட சிறுவன்! பிறகு என்ன ஆனது என்று பாருங்க!

அதுபோன்ற ஒரு குறும்பை தான் நாம் இப்போது இணையத்தில் கண்டு ரசிக்கப்போகிறோம், பலருக்கும் பனி சூழ்ந்திருக்கும் இடங்களை கண்டாலே மிகவும் பிடிக்கும், அந்த இடங்களில் விளையாட வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.  தற்போது ஒரு பாண்டாகரடி பனியில் கிடந்து விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது, ஒரு பாண்டாகரடி குழந்தை போல பனியில் மகிழ்ச்சியாக உருண்டு புரண்டு விளையாடுகிறது.  இந்த காட்சியினை பார்ப்பதற்கு மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது, பாண்டாகரடி செய்யும் க்யூட்டான செயல் BUITENGEBIEDEN என்கிற ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.

 

ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவானது 27 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றிருக்கிறது, இந்த வீடியோவிற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்துள்ளது.  இணையவாசிகள் பலரையும் பாண்டாகரடியின் இந்த க்யூட்டான செயல் கவர்ந்து இருக்கிறது.

மேலும் படிக்க | 'ப்ப்பா... என்ன ஒரு பொறுப்பு': யானை செய்த செயலால் வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News