SeePics: குட்டி ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கோலி!

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோலி, சிறுமி ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணயத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Jun 24, 2018, 02:12 PM IST
SeePics: குட்டி ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கோலி! title=

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோலி, சிறுமி ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணயத்தில் வைரலாகி வருகின்றது!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 டி20, 3 ஒருநாள், 5  டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கு முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி நேற்று இங்கிலாந்து சென்றது. முன்னதாக விமான நிலையத்தில் இந்த அணி வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதேவேலையில் விமான நிலையத்தில் சிறுமி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க அச்சிறுமியுடன் கோலி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

Trending News