ரஜினி-ன் 68-வது பிறந்தநாள்: "Common DP" வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்....

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு 'Common DP' வெளியீடு....

Last Updated : Dec 11, 2018, 03:01 PM IST
ரஜினி-ன் 68-வது பிறந்தநாள்: "Common DP" வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்.... title=

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு 'Common DP' வெளியீடு....

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 

பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எனினும் அதிகாரப்பூர்வ தகவகள் வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுத, அனிரூத் இசையமைத்து பாடியுள்ளார். தர லோக்கலாக பாடல் வரிகள் தொடுக்கப்பட்டு நிலையில் ரசிகர்களிடையே மரண மாஸ் வரவேற்பினை பெற்றுள்ளது இப்பாடல்.

இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த் தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வருடா வருடம் ரஜினியின் பிறந்தநாளைக் சிறப்பாக கொண்டாடுவது அவரது ரசிகர்களின் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டார்கள் ரசிகர்கள். 

ரஜினிகாந்தின் பிறந்தநாளை இணையத்தில் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 'Common DP' வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரஜினியின் ரசிகரும், 'பேட்ட' திரைப்படத்தின் இயக்குநருமான கார்த்திக் சுப்பராஜ் ட்விட்டரில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

அதில், பேட்ட, பாட்ஷா, கபாலி திரைப்படங்களின் கெட்டப்புகளுடன், அவரது இயல்பான படமும் இந்த DP-ல் இடம்பெற்றுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் தங்களது புரைஃபைலில் வைத்து, கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர். 

 

Trending News