தான் அரசியலுக்கு வருவதாகவும், விரைவில் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லி வரும் நிலையில் கமல், அவரது டிவிட்டர் பக்கத்தில் கோவிலைக் கொள்ளை அடிப்பவரை குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். பதிவில் கூறியதாவது:-
கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு.
அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது.
நாமும் அதைச் சகிக்கலாகாது— Kamal Haasan (@ikamalhaasan) November 29, 2017