Police Cares: காக்கிச்சட்டைக்குள் கருணை இருப்பதை நிரூபித்த பெண் போலீஸ்

பெண்களுக்கு கடமை உணர்வும், கருணையும் அதிகம் என்று சொல்வார்கள். அதை நிரூபித்திருக்கிறார் காக்கிச்சட்டை போட்ட இந்த பெண் போலீஸ். இந்த காவல்துறை பணியாளர் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு அடையாளம் தெரியாத சடலத்தை சுமந்து சென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 2, 2021, 06:49 PM IST
  • மனிதாபிமானம் மிக்க பெண் போலீசுக்கு பாராட்டுகள் குவிகின்றன
  • காக்கிச்சட்டைக்குள் கருணை
  • பலருக்கு உதாரணமாக திகழும் சிரிஷா
Police Cares: காக்கிச்சட்டைக்குள் கருணை இருப்பதை நிரூபித்த பெண் போலீஸ் title=

பெண்களுக்கு கடமை உணர்வும், கருணையும் அதிகம் என்று சொல்வார்கள். அதை நிரூபித்திருக்கிறார் காக்கிச்சட்டை போட்ட இந்த பெண் போலீஸ். இந்த காவல்துறை பணியாளர் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு அடையாளம் தெரியாத சடலத்தை சுமந்து சென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெண் போலீசுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், காவல்துறை டி.ஜி.பியும் டிவிட்டரில் பாராட்டு செய்தியை வெளியிட்டுள்ளார். அத்துடன் இணைப்பாக கொடுக்கப்ப்ட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின்  காசிபக்கா நகராட்சியில், ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் சிரிஷா என்பவர், முதியவரின் சடலம் அழுகி துர்நாற்றம் வீசிக் கொண்டிருப்பதைக் கண்டார்.  சடலத்துக்கு அருகில் செல்ல முடியாத அளவு துர்நாற்றம் வீசியது.

Also Read | குழந்தைக்காக 7 ஆண்டு தவமிருந்தோம், பிழைக்க உதவுங்கள், தாயின் கதறல்

இறந்து கிடந்த முதியவர் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை. பலரிடமும் விசாரித்த பிறகு, தொண்டு நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளி செய்தார் எஸ்.ஐ சிரிஷா. 

துர்நாற்றம் வீசிய சடலத்தை தூக்க யாருமே முன்வராத நிலையில், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன், தானே சடலத்தைச் சுமந்து வந்தார் காவல்துறை அதிகாரி. இறுதி சடங்கிற்காக பணமும் கொடுத்து அனைவருக்கும் ஆச்சரியத்தை பெண் போலீஸ் அதிகாரி ஏற்படுத்தியுள்ளார்.

ஆந்திராவில் மட்டுமல்ல, தற்போது சிரிஷா சமூக ஊடகத்தில் பலராலும் பாராட்டப்படுகிறார். ஆந்திரப் பிரதேச காவல் துறையின் டிஜிபி கெளதம் சவாங் உட்பட பல்வேறு அதிகாரிகளும், பொது மக்களும் எஸ்.ஐ சிரிஷாவை பாராட்டி பதிவிட்டிருக்கின்றனர். சிரிஷா சடலத்தை சுமந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

Also Read | சித்ராவின் மரணம் எப்படி நடந்தது? நிபுணர் குழு அறிக்கையில் அதிர்ச்சி..

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News