Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ

 பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், இங்கே பாம்பை கண்டு பயப்பட்டாமல் முயல் சண்டை போடுகிறது

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 15, 2022, 04:30 PM IST
Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ title=

 

சமூக ஊடக உலகில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். விலங்குகளின் வேட்டைகள், சண்டைகள், குறும்புகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன. 

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே மனதில் ஒரு வித பீதி உணர்வு தோன்றும். ஆனால், முயல் ஒன்று பாம்ப்பைக் கண்டு அஞ்சாமல் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பும் முயலும் பயங்க்ரமாக மோதிக் கொள்வதை வீடியோவில் காணலாம். 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூங்காவின் ஒரு மூலையில் ஆபத்தான பாம்பு ஒன்று காணப்படுகிறது. முதலில் சீண்டிய முயலை ஒன்றும் செய்யாமல் பாம்பு, முன்னோக்கி ஊர்ந்து செல்கிறது. ஆனால் முயல் விடாமல் அதனை சீண்டியதால், கோபமைடைந்த பாம்பு முயலை தாக்குகிறது. பாம்பு முயலைத் தாக்க, முயலும் அவரிடமிருந்து தப்பிக்க குதிக்கிறது. ஆனால் இறுதியில் பாம்பு அதனை கடித்து, தூக்கி எறிந்தது..

வீடியோவை இங்கே பாருங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by طبیعت (@nature27_12)

இந்த வீடியோ வைரலானது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல வகையில் தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News