இணையத்தை பற்ற வைத்த பள்ளி மாணவன் நடனம்: வைரலாகும் வீடியோ

Funny Dance Video: இந்த வீடியோவில், பள்ளி மாணவர் ஒருவர் தனது நடனத்தால் இணையத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். மாணவரின் இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 21, 2023, 12:06 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் anshkukreja_01 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைகுகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல்வேறு கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
இணையத்தை பற்ற வைத்த பள்ளி மாணவன் நடனம்: வைரலாகும் வீடியோ title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்கும் மற்றொரு வீடியோ வகை நடன வீடியோக்கள் ஆகும். இந்த வீடியோக்கள் மூலம் பலரது நடன திறமைகள் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. பலருக்கு இப்படிப்பட்ட வீடியோக்கள் மூலம் உலக அரங்கில் அறிமுகமும் அங்கீகாரமும் கூட கிடைத்துள்ளது. திருமணங்கள், பல்வேறு விழாக்கள், பள்ளிகள், தெருக்கள் என பல இடங்களில் பலர் ஆடும் நடனத்தை நாம் இந்த வீடியோக்களில் பார்த்துள்ளோம். பல வருடங்களாக மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு வழியாக நடனம் இருந்து வந்துள்ளது. ஒரு நல்ல நடனத்தை ரசிக்காத எவரும் இருக்க முடியாது.

நடன வீடியோக்களுக்கு இணையத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. பலர் தங்களது அற்புதமான நடனங்களை இணையத்தில் போஸ்ட் செய்வது உண்டு. சிலர் பிறர் ஆடும் நடனத்தை ரெகார்ட் செய்து பகிர்கிறார்கள். இணையவாசிகளுக்கு பிடித்தமான குழந்தைகளும் நடனமும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும். இவற்றை ஒன்று சேர்த்த ஒரு வீடியோதான் தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 

நடன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படட் உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. சில நடன வீடியோக்களைப் பார்த்தவுடன் நமக்கும் நடமாடத் தோன்றும். நடனமாடுபவரின் மூடும், சுறுசுறுப்பும் நம்மையும் பற்றிக்கொள்ளும். அப்படி ஒரு வீடியோ தற்போது பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் இதை அதிகமாக பகிர்ந்து வைரல் ஆக்கி வருகிறார்கள். 

இந்த வீடியோவில், பள்ளி மாணவர் ஒருவர் தனது நடனத்தால் இணையத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். மாணவரின் இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில், பல மாணவர்கள் மத்தியில் ஒரு மாணவர் நடனமாடத் தொடங்குவதைக் காண முடிகின்றது. 

இணையத்தை பற்ற வைத்த மாணவர்

அந்த மாணவர் ஆடுவதை பார்த்தால் மிக ஆச்சரியமாக உள்ளது. அவருக்கு இருப்பது உடலா அல்லது எலாஸ்டிக்கா என்ற சந்தேகமே வருகின்றது. அவரது எக்ஸ்பிரஷன்களும் மிகவும் அற்புதமாக உள்ளன. அந்த மாணவர் ஆட, அருகில் பள்ளி சீருடையில் இருக்கும் அவரது நாண்பர்களும் தோழிகளும் கை தட்டி அவரை உற்சாகப்படுத்துவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

இப்பாடல் யே தில் ஆஷிகானா என்ற இந்தி படத்தில் இடம்பெற்றது பாடலாகும். இந்த பாடலுக்கு மாணவர் ஆடும் ஆட்டத்தை இணையவாசிகள் ஆர்வதோடு பார்த்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | அடியாத்தி! சைவத்துக்கு மாறிய சிங்கம் - இலையை தேடி தேடி சாப்பிடும் வீடியோ வைரல்

மாணவரின் அசத்தல் நடனத்தை இங்கே காணலாம்:

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் anshkukreja_01 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைகுகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல்வேறு கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | இணையத்தை தெறிக்கவிட்ட சிறுவனின் சிவ தாண்டவம்: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News