ஊரடங்கு காலத்தில் களரி பயிற்சி கற்றுக்கொள்ளும் அதிதி ராவ்: WATCH

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் அதிதி ராவ், தற்போது களரி பயிற்சி மேற்கொண்டுள்ளார்...!

Last Updated : May 10, 2020, 08:46 PM IST
ஊரடங்கு காலத்தில் களரி பயிற்சி கற்றுக்கொள்ளும் அதிதி ராவ்: WATCH title=

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் அதிதி ராவ், தற்போது களரி பயிற்சி மேற்கொண்டுள்ளார்...!

பாலிவுட்டில் டெல்லி-6, ராக்ஸ்டார், மர்டர்-3, குப்சுரத், பத்மாவத் உட்பட பல படங்களில் நடித்தவர் அதிதி ராவ். மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். பின்னர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். 

இப்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் அதிதி ராவ், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கிறார். 

நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் இருந்தபடி, சமையல், இசை, நடனம், ஒர்க் அவுட் தொடர்பான வீடியோ, படக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகை அதிதிராவும் அதை செய்து வருகிறார். இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Kicking those blues away while trying to not fall flat on my face #KalariPractice #QuarantineDiaries

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari) on

வழக்கமாக உடற்பயிற்சி படங்களை வெளியிடும் அதிதி ராவ் இந்த வீடியோவில், வேகமாக வந்து நின்று காலைத் தூக்கி கைகளை தொடுகிறார். இது களறி பயிற்சியாம். தனது உடற்பயிற்சியில் ஒரு பகுதியாக, களறியில் செய்யும் பயிற்சியை செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News