விஜய் ரசிகர்களுக்கு 'சர்கார்' திரைப்படத்தின் Double treat... செய்தி!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'சர்கார்' திரைப்படத்தில் டப்பிங் செய்த அனுபவம் குறித்து நடிகை வரலட்சுமி பகிர்ந்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2018, 04:14 PM IST
விஜய் ரசிகர்களுக்கு 'சர்கார்' திரைப்படத்தின் Double treat... செய்தி! title=

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'சர்கார்' திரைப்படத்தில் டப்பிங் செய்த அனுபவம் குறித்து நடிகை வரலட்சுமி பகிர்ந்துள்ளார்!

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகள் தற்போது நடந்து வரும் வேலையில் கடந்த அக்டோபர் 2-ஆம் நாள் இப்படத்தின் பாடல்கள் தமிழில் வெளியானது. தமிழகத்தில் பல சர்ச்சைகளை சந்தித்து வரும் இத்திரைப்படம் வெற்றிகராமாக திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தெலுங்கு வெர்ஸன் வேலைகளும் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக இப்படத்தில் நடித்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் தெலுங்கு வெர்ஸனுக்கு தான் டப்பிங்க் செய்து வரும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். எனவே தமிழ் வெர்ஸன் சர்கார் திரைப்படத்துடன் ரசிகர்கள் தெலுங்கு வெர்ஸன் சர்கார் திரைப்படத்தினையும் விரைவில் கண்டு ரசிகலாம என்ற செய்தி உறுதியாகியுள்ளது...

இந்த பதிவில் 'விக்ஸ்' இல்லாமல் தன் வேலையினை சிறப்பாக செய்துமுடிக்க இயலாது என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார் :)... 

Trending News