வெளியானது ஜூங்கா திரைப்படத்தின் அசத்தலான Trailer!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ஜூங்கா. இத்திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசையினை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Updated: Jun 13, 2018, 12:46 PM IST
வெளியானது ஜூங்கா திரைப்படத்தின் அசத்தலான Trailer!
Screengrab (YouTube)

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ஜூங்கா. இத்திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசையினை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தினை அடுத்து விஜய் சேதுபதி - கோகுல் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ஜூங்கா. வனமகன் திரைப்பட நாயகி சாயிஷா மற்றும் மடோனா செபாஸ்டீன் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி நடித்தப் படங்களில் இதுதான் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாகும். இதன்காரணமாக விஜய் சேதுபதியே இப்படத்தினை தயாரிக்கின்றார். நடிகர் அருண் பாண்டியன் இப்படத்தின் வெளியீட்டு உரிமையினை பெற்றுள்ளார்.

பாரிஸில் வசிக்கும் டானாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரிஸிலேயே படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று இப்படத்தில் ட்ரைலர் மற்றும் இசையினை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.