விஜய்யின் சிறிய வயது புகைப்படம்: எப்படி இருக்காறு தெரியுமா?

இதுவரை பார்த்திராத விஜய் அரியவை புகைப்படம் ஒன்றை அவருடைய தம்பியான நடிகர் விக்ராந்த் வெளியிட்டுள்ளார். 

Updated: Mar 8, 2018, 01:04 PM IST
விஜய்யின் சிறிய வயது புகைப்படம்: எப்படி இருக்காறு தெரியுமா?

இதுவரை பார்த்திராத விஜய் அரியவை புகைப்படம் ஒன்றை அவருடைய தம்பியான நடிகர் விக்ராந்த் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார். 

மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படமாகும்.

நடிகர் விஜய் பற்றிய செய்திகள் என்றால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். 

இந்நிலையில், நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

அதை அவருடைய தம்பியான நடிகர் விக்ராந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்:_ அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த புகைப்படத்தை பார்க்கிறேன். நான் 6 மாத குழந்தையாக இருந்தபோது என்னுடைய இரண்டு அண்ணன்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவு செய்துள்ளார்.