Adorable Video: குதூகலமாக சேற்றில் கும்மாளம் போடும் குட்டி யானைகள்

சேற்றில் புரண்டு விளையாடி மகிழும் யானைகளைப் பார்த்தால் அவற்றின் உற்சாகமும் மகிழ்ச்சியும் நமக்கும் தொற்றிக் கொள்ளும்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 26, 2021, 07:53 PM IST
  • குதூகலமாக சேற்றில் கும்மாளம் போடும் குட்டி யானைகள்
  • பார்க்கும்போதே பரவசமூட்டும் வீடியோ
  • இணையத்தில் வைரலாகும் குட்டி யானைகள் வீடியோ
Adorable Video: குதூகலமாக சேற்றில் கும்மாளம் போடும் குட்டி யானைகள் title=

ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை (Sheldrick Wildlife Trust) ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோவில் யானைகள் சேற்றில் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

சேற்றில் புரண்டு விளையாடி மகிழும் யானைகளைப் பார்த்தால் அவற்றின் உற்சாகமும் மகிழ்ச்சியும் நமக்கும் தொற்றிக் கொள்ளும். குட்டி யானைகள் வேடிக்கையாக விளையாடும் காட்சியை பார்க்கும் அனைவரும் ரசிக்கின்றனர். சேற்றில் அவை புரளும்போது, சேறு தெறிக்கும் சப்தமும் கேட்கிறது.
 
விலங்குகளின் வீடியோக்களை அனைவரும் விரும்புகிறார்கள்! நாய்க்குட்டிகள் விளையாடும் அழகான வீடியோக்கள், முட்டாள்தனமான செயல்களைச் செய்யும் பூனைகள், பிரம்மாண்ட யானைகள், சீறும் சிங்கங்கள், பதுங்கும் புலிகள் என பலா வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. அவை அனைத்தும் இதயத்தை நெகிழச் செய்து உதடுகளில் புன்னகையை பூக்கச் செய்கின்றன. 

Also Read | தனது படத்தை மூக்கால் வரைந்த ரசிகரை பார்த்து அசந்து போன நடிகர் சூர்யா!

தற்போது இதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அழகான குட்டியானைகள் தங்கள் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கின்றன என்பதை பார்த்தால் சிரிப்பு வருகிறது.  

இந்த வீடியோவை ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த அறக்கட்டளை அவ்வப்போது இதுபோன்ற இயற்கையான காட்சிகளின் வீடியோக்களை வெளியிடும். சேற்று நீரை தங்களது பெரிய கால்களால் யானைகள் மிதிக்கும்போது அது நாலாபுரமும் தெறிப்பதையும் பார்க்க முடிகிறது. அவற்றின் பராமரிப்பாளர் கவனிக்கும்போது அவை மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.  

"சேற்று பேரின்பம் இப்படித் தான் இருக்கும்!" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இணையத்தில் பார்த்து ரசிக்கும் பலரும் ஜாலியான டிவிட்களை பதிவிடுகின்றனர்.  

வீடியோ வைரலாகி மக்களை சிரிக்க வைக்கிறது. இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர், மக்கள் யானைகளின் மீதான தங்கள் கருத்துக்களையும், ஈமோஜிக்களை பகிர்ந்து அன்பை அள்ளித் தெளிக்கின்றனர்.

ஒரு பயனர் குறும்புத்தனமாக இப்படி எழுதுகிறார், ”இது சருமத்திற்கு மண் குளியல் நல்லது என்று கூறுகிறார்கள், ஆனால் நான் சிறுவனாக இருந்தபோது சேற்றில் விளையாடினால் என் அம்மா என் பின்புறத்தில் அடிப்பார், பேசாமல் நானும் இப்படி யானையாக இருந்திருக்கலாம்.”

மற்றொருவர், ”அட்டகாசம்! என்ன ஜாலி! மூன்று குட்டிகளும் யார் என்று தெரியுமா? ” என்று பதிவிட்டுள்ளார். மூன்றாவதாக ஒருவர் இப்படி சந்தேகம் தெரிவிக்கிறார். "அவர்கள் ஒரு பந்தை வைத்திருப்பது போல் தெரிகிறது." உண்மையில் யானைகள் பந்து வைத்திருக்கிறதா? பார்த்து சொல்லுங்கள்!

Also Read | Elephant Viral Video: சிங்கத்தின் கர்ஜனை விட நடுங்க வைத்த யானை பிளிறும் சத்தம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News