Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவர்! யானை மரத்தை சாய்த்த காரணம் தெரியுமா!

Viral Video: இணைய தளத்தில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு தகவல் களஞ்சியமாக விளங்குகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 11, 2023, 08:36 PM IST
  • வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
  • அன்றாட வாழ்வில் ஏற்படும் மனழுத்தங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவர்! யானை மரத்தை சாய்த்த காரணம் தெரியுமா! title=

இணையம் ஒரு தனி உலகம் அதில் தகவல்களுக்கு என்றும் பஞ்சமில்லை. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு தகவல் களஞ்சியமாக விளங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு தளமாகவும் உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களையும், மனழுத்தங்களையும் சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடுகின்றன. விலங்குகளில் குரங்கு, யானை, பாம்பு, நாய் என இவற்றின் வீடியோவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சில நமது இதயத்தை கொள்ளையடித்து விடுகின்றன என்றே கூறலாம். அதிலும் சில நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுகின்றன. அப்படி ஒரு மிக கியூட்டான யானையின் வீடியோ ஒன்று மீண்டும் ஆன்லைனில் வைரலாகி வருகிறது. அதில் யானை ஒன்று மரத்தை சாய்பதைக் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை அறிந்தால் நீங்கள் வாயடைத்து போவதோடு, உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.

மேலும் படிக்க | Viral Video: ஹூஹூம்.... இது தேர்ற கேஸ் இல்லை... குட்டியானையின் க்யூட் வீடியோ!

வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:

அதில் யானை ஒன்று மரத்தை ஒடித்து சாய்க்கிறது, நாம் ஏதோ அது கோபத்தில் செய்கிறது என எண்ணி இருப்போம். ஆனால், விஷயமே வேறு. ஆம், அது தன் பின்பக்கத்தில் ஏற்பட்ட அரிப்பை சொறிந்து கொள்வதற்காக சாய்த்துள்ளது. மரத்தை கீழே சாய்த்து விட்டு அதன் மீது அமர்ந்து கொண்டு தேய்த்த படி வசதியாக சொறிந்து கொள்கிறது. இந்த வீடியோ இணைய வாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | 'தம்பி...போய் ஓரமா நில்லு': சீண்டிய காண்டாமிருகத்தை வெச்சி செஞ்ச யானை, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News