Watch: காட்டுக்குள் கணவருடன் சன்னி லியோன் கவர்ச்சி நடனம்.......

கவர்ச்சி நடிகை சன்னி லியோனும், அவரது கணவரும் இணைந்து ஆடிய நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரளாகி வருகிறது! 

Last Updated : Jan 22, 2019, 11:20 AM IST
Watch: காட்டுக்குள் கணவருடன் சன்னி லியோன் கவர்ச்சி நடனம்....... title=

கவர்ச்சி நடிகை சன்னி லியோனும், அவரது கணவரும் இணைந்து ஆடிய நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரளாகி வருகிறது! 

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். 

மேலும் தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த பிஸி செட்யூலுக்கு மத்தியில் சன்னி லியோன் தனது குடும்பத்தாருடன் நேரங்களை செலவிடவும் மறப்பதில்லை. அந்த வகையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தங்கி உள்ள அந்த இருவரும் இணைந்து, புதிதாக வெளியான சிம்மா என்ற இந்தி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளனர். அந்த படத்தில் ரண்வீர் சிங்கும், நடிகை சாராவும் இணைந்து ஆடிய 'அனக் மேரி' என்ற பாடல் வரிகளுக்கு, இருவரும் அதே தாளத்தில், அதே அசைவுகளை வெளிப்படுத்தி ஆட்டம் போட்டு உள்ளனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Amazing to get a chance to visit Tashi Gomang Stupa India !! Thank you for having us !!!!

A post shared by Daniel "Dirrty" Weber (@dirrty99) on

சன்னி லியோனின் இஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளதை அடுத்து, இருவரும் இணைந்து நடனமாடி உள்ளதாகவும், இந்த நடனக்காட்சிகள் ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்றும் இருவரும் கூறியுள்ளனர்.

அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.....

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Thanks everyone 18million!! Woohoo! Time to dance and celebrate with @dirrty99 Love all 18 million of you!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

 

Trending News