ஆத்தாடி! Pant கழன்டாலும் பரவால உயிரோட ஓடிரு: US திருடனின் வீடியோ...!

இணையத்தை கலக்கும் கொள்ளையடிக்க வந்த இடத்தில் அலறியடித்து ஓடிய திருடனின் நகைச்சிவை வீடியோ..! 

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Sep 10, 2018, 05:43 PM IST
ஆத்தாடி! Pant கழன்டாலும் பரவால உயிரோட ஓடிரு: US திருடனின் வீடியோ...!
Pic Courtesy /@Aurora Police Department.

இணையத்தை கலக்கும் கொள்ளையடிக்க வந்த இடத்தில் அலறியடித்து ஓடிய திருடனின் நகைச்சிவை வீடியோ..! 

இந்த பரந்த உலகத்தில் வேடிக்கையான பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிவதில்லை. சில நிகழ்வுகள் மட்டும் எப்படியாவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி அனைவரிடமும் சென்றடைகிறது. 

தற்போதைய காலகட்டத்தில் சிசிடிவி கேமிராவில் மூலம் தான் பல கொள்ளையர்களை காவல் துறையினர் பிடிக்கின்றனர். இது போன்ற ஒரு கொள்ளையரின் ஒரு நிமிடமுடைய வீடியோவை அமெரிக்கா ஆரோர காவல்துறையினர் தனது முகநூல் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டுள்ளது. 

அமெரிக்கா நாடு கொலராடோ மாகாணத்தில் உள்ள இ-ஸ்டோர் ஒன்றில் கொள்ளை அடிக்க வந்த திருடன், பயந்து தப்பியோடும் வீடியோ சமூக வலைத்ததளத்தில் வைரலாகி உள்ளது.

அதில், இ-ஸ்டோரில் கொள்ளயடிக்க திட்டமிடும் திருடன், கவுண்டரில் இருந்த பணியாளரை நோக்கி துப்பாக்கியை காண்பிக்க முயல்கிறார். எதிர்பாராத விதமாக, திருடனின் கையில் இருந்த துப்பாக்கி நழுவி கவுண்டருக்குள் விழுகிறது. அதனால், அச்சம் அடைந்த திருடன் இ-ஸ்டோரில் இருந்து தப்பியோட முயற்சிக்கிறார்.

வேகமாக ஸ்டோரை விட்டு வெளியேறிய திருடன், தனது பேண்ட் கலருவதை கூட பொருட்படுத்தாமல் திரும்பிப் பார்க்காமல் பயந்தோடும் காட்சி CCTV வீடியோவில் பதிவாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பணியாளர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், இ-ஸ்டோரில் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது...!