Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

இணைய உலகில், தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 16, 2022, 03:06 PM IST
Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம் title=

இணைய உலகில், தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும். சமூக ஊடக உலகத்தில் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது அதிர்ச்சி அளிக்கக்கூடிய அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றன.

பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள். 

தற்போது இணையத்தில், ஆபத்தான பாம்பௌடன் அச்சமின்றி விளையாடும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பாம்பை கையில் ஏந்தியுள்ள அந்த பெண் மிக லாவகமாக அதனை கையாளவதைக் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: பாம்பிடம் சிக்கித் திணறும் கன்றுக் குட்டியின் அலறல்; பதற வைக்கும் காட்சிகள்

பாம்பை கையில் ஏந்தியுள்ள போது, அது பல முறை கடித்தாலும், அதனால் சிறிதும் அச்சமோ, பயமோ அடையாமல், அதனை மிக அழகாக கையாளுவதை பார்ய்த்து நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

வைரலாகி வரும் வீடியோவை கீழே காணலாம். 
 

இந்த வீடியோ snake._.world  என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ள நிலையில், மிக விரைவாக வைரலாகி வருகிறது. பல சமூக ஊடக பயனர்கள். பெண்ணின் வீரத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த பெண் மிக தைரியமாக கையாண்டு வந்தாலும், இந்த ஸ்டண்ட் மிகவும் ஆபத்தானது என்று நெட்டிசன்கள் இந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்தனர்.  பலர் அவர் ஆபத்தை அறியாமல் உயிருடன் விளையாடுகிறார் எனவும், இப்படி செய்வது மிகவும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம், இது தேவையில்லாதது எனவும் எச்சரித்துள்ளனர். 

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News