Viral Video of Baby Elephant: கூடலூர் அருகே தாயிடமிருந்து பிரிந்து வந்த குட்டி யானையை மீண்டும் அதன் தாயிடம் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சியில், குட்டி யானை மிகவும் நம்பிக்கையுடன் வனத்துறையினரை பின்தொடர்ந்து சென்ற காட்சிகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடகத்தில் வைராகி வருகின்றன.
கூடலூர் வன கோட்டத்தில், தங்கசுரங்கம் பகுதியில் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி ஒன்று தனது தாயை பிரிந்த நிலையில் சுற்றிக் கொண்டிருந்தத போது சிறிய குழியில் விழுந்து விட்டது. அதனை பத்திரமாக மீட்ட வனத்துறை ஊழியர்கள் அதனை தாயிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். முதுமலை கால்நடை மருத்துவர் அறிவுரையின் பேரில் அந்த யானை குட்டிக்கு பால் மற்றும் குளூக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டது.
ALSO READ | Viral Video: விஷ பாம்பை அசால்டாக கையாளும் 2 வயது குழந்தை..!!
பின்னர் நேற்று மாலை அருகில் உள்ள வனப்பகுதியில் யானை கூட்டம் இருப்பதை அறிந்த வனத்துறையினர் அந்த பெண் யானை குட்டியை கால்நடையாகவே அழைத்துச் சென்று யானை கூட்டம் இருக்கும் இடத்தில் விடப்பட்டது. பின்னர் குட்டியின் குரலை கேட்டதும், அங்கே ஓடோடி வந்த காட்டு யானைகள் குட்டியை பத்திரமாக காட்டுக்குள் அழைத்துச் சென்றன.
A kutty baby elephant was reunited with the family after rescue by TN foresters in Mudumalai. Most heartwarming indeed. Kudos #TNForest #elephants #mudumalai pic.twitter.com/eX9gBd3oK7
— Supriya Sahu IAS (@supriyasahuias) October 6, 2021
சுமார் மாலை 6 மணியளவில் பெண் குட்டியானை, அதன் கூட்டத்துடன் சேர்த்து வைக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#ForestDepartment successfully reunited this baby elephant with its family in Gudalur, Tamilnadu @Krish_TNIE @NewIndianXpress pic.twitter.com/ES0hhsUWUE
— Praveen Angusamy, IFS (@PraveenIFShere) October 7, 2021
ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR