Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

மு‌ட்டை‌யி‌ட்டு கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் இன‌த்தை‌ச் சே‌ர்‌ந்த கட‌ல் ஆமைக‌ள் கரு‌த்த‌ரி‌த்தது‌ம், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாகப் பய‌ணி‌க்க‌த் தொடங்கு‌ம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2022, 04:12 PM IST
Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!! title=

ஆலிவ் நிறச் சிற்றாமை (Olive ridley turtle) என்பது இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காணப்படும் கடல் ஆமை வகை ஆகும்.  இந்த ஆமைகள் இதய வடிவம் கொண்டு ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதால் ஆலிவ் நிற சிற்றாமை என்று பெயர் பெற்றன.

மு‌ட்டை‌யி‌ட்டு கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் இன‌த்தை‌ச் சே‌ர்‌ந்த கட‌ல் ஆமைக‌ள் கரு‌த்த‌ரி‌த்தது‌ம், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாகப் பய‌ணி‌க்க‌த் தொடங்கு‌ம். அவை பெரும் கூட்டமாக வந்து மணலில் குழி தோண்டி  முட்டைகளை இடுகின்றன. 

முட்டை இடுவதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஒடிசா கடற்கரைக்கு வந்து சேரும். IFS அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், 2.45 லட்சத்திற்கும் அதிகமான ஆமைகள் மணலில் முட்டையிடுவதற்காக காஹிர்மாதா மற்றும் ருஷிகுல்யா ரூக்கரி ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு கூட்டமாக படையெடுத்து வரும் காட்சியைக் காணலாம் . 

"2022 அரிபடா கஹிர்மாதாவில்  ஆமைகள் படயெடுத்து வந்தன, ஊழியர்கள் நேற்று இரவு நாசி-2 இல் சுமார் 2.45 லட்சம் ஆலிவ்  சிற்றாமைகள் வந்ததாக மதிப்பிட்டுள்ளனர், இது முதல் நாளின் அதிகபட்ச எண்ணிக்கை" என்று சுசந்தா நந்தா விளக்கினார்.

வீடியோவைப் பகிர்ந்துகொண்ட அவர், ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்தின் கஹிரமாதா கடற்கரையில் மிக அற்புதமான இயற்கை நிகழ்வு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண் ஆலிவ் ரிட்லிகள் இங்கு மணலில் முட்டையிட பிரமிக்க வைக்கிறது. அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க ஊழியர்கள் அனைவரும் தயாராக உள்ளனர்.

மேலும் படிக்க | ஓடும் ஆற்றில் மீன் பிடிக்கும் கரடிகள் - வைரல் வீடியோ 

வீடியோவை இங்கே காணலாம்:

அவர் ஆலிவ் ரிட்லீஸின் மற்றொரு வீடியோவைப் பகிர்ந்துகொண்டு எழுதினார்,  ‘இயற்கையின் அதிசயங்கள்... 2.45 இலட்சம் வருகை தரும்  பெண் ஆமைகள் கடற்கரையை  தன வசம் எடுத்துக் கொண்டுள்ளது.  இந்த விருந்தினர்களுக்கு Z++ பாதுகாப்பை நீட்டிக்கும் ஊழியர்கள்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News