Viral Video: ‘சிங்கத்தை சீண்டினால் என்ன ஆகும்’; சிங்கம் பாடம் புகட்டும் வைரல் வீடியோ!

சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில்,  சிங்கம் தாக்கும் வீடியோ  ஒன்றும் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 3, 2022, 09:26 AM IST
  • சிங்கத்தின் தாக்குதலால் அதிர்ச்சியில் மக்கள்
  • கூண்டிற்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நபர்.
  • காணொளி உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்
Viral Video: ‘சிங்கத்தை சீண்டினால் என்ன ஆகும்’; சிங்கம் பாடம் புகட்டும் வைரல் வீடியோ! title=

சமீபத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. காட்டில் இருந்தாலும் கூண்டில் இருந்தாலும், சிங்கம் சிங்கம் தான் என்பதை சிங்கத்தை சீண்டிய நபர் உணரும் நிலை ஏற்பட்டதை வீடியோவில் காணலாம்.

இதில் ஒரு நபர் உயிரியல் பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை சீண்டும் வேலையில் ஈடுபட்டார். இந்த நபர் சற்றும் யோசிக்காமல் நேரடியாக கூண்டில் கையை நுழைப்பதை வீடியோவில் காணலாம். அந்த நபர் சிங்கத்தைத் சீண்டும் நோக்கில், அதனை தொட முயன்றார். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததோடு,  சிங்கம் அவரது வலது கையை கவ்விப் பிடித்தது.

சிங்கம் தாக்கிய சம்பவம் செனகலில் உள்ள பார்க் ஹென் உயிரியல் பூங்கா என கூறப்படுகிறது. சிங்கத்தின் கர்ஜனையின் சத்தத்தில் காட்டின் கொடூரமான விலங்குகள் கூட நடுங்குகின்றன என்ற போது மனிதன் எம்மாத்திரம். சிங்கம் மனிதனை தாக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. சமூக ஊடகத்தில் (Social Media) வெளியான சமீபத்திய இந்த வீடியோவில், கூண்டில் அடைபட்ட சிங்கம் ஒரு மனிதனின் கையை தனது வாயில் கெட்டியாக கவ்விக் கொண்டிருப்பதைக் நீங்கள் காணலாம். மனிதனின் அலறல் சத்தத்தையும் கேட்கலாம்.

ALSO READ | 'முடிஞ்சா தொட்டுப்பார்.....' என பாம்பை பதறவைத்த கோழியின் வைரல் வீடியோ 

வீடியோவை இங்கே காணவும்:

 
சிங்கத்தை சீண்ட நினைத்த நபர் தனது கைகளை மீட்க முடிந்தவரை முயற்சி செய்கிறார். அதேநேரம் அருகில் இருந்த சிலர் கற்களை வீசி சிங்கத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்த போதும் சிங்கம் நகரவில்லை. இருப்பினும், சில நொடிகளில் சிங்கம் மனிதனின் கையை விடுவித்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த வீடியோவை பார்த்த பிறகு யாரும் இப்படி ஒரு தவறை செய்ய நினைக்க மாட்டார்கள்.

இந்த வீடியோ யூடியூப்பில் எவ்ரிதிங் இன் ரியல் லைஃப் டிவி என்ற சேனலில் பகிரப்பட்டது. இதுவரை இந்த வீடியோ 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்து சிலர் அதிர்ச்சியடைந்த நிலையில், பலர் நகைச்சுவையாகவும் பதில் அளித்துள்ளனர். இங்கு படம் கற்ற பிறகு, இந்த நபர் தனது வாழ்நாள் முழுவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவார் என்று ஒரு பயனர் நகைச்சுவையாக எழுதினார்.

ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News