Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

யானைகள் உட்பட அனைத்து உயிரினங்களின் மிக விருப்பமான செயல்களில் ஒன்று தூங்குவது. குட்டி யானை நன்றாக தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2022, 08:44 PM IST
  • நன்றாக தூங்கும் குட்டி யானை
  • காவலரிடம் உதவி கேட்கும் தாய் யானை.
  • சமூக வலைதளங்களில் வைரலாகிய இந்த வீடியோ 5.3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது
Viral Video:  அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை title=

உலகில் எந்த வகை உயிரினமாக இருந்தாலும் சரி, அதன் குட்டிகள் மீது தாய் வைத்திருக்கும் பாசம் என்பது வார்த்தையால்  விளக்க முடியாதது. மனிதர்கள் ஆனாலும்  சரி, விலங்குகள் ஆனாலும் சரி தனது குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டும் என்று தான் குறிக்கோளாக இருக்கும் என்பதை சமூக வலைதலங்களில் வைரலாகும் இரு வீடியோவில் இருந்து அறிந்து கொள்ளலாம். 

காலை நேரம் தூக்கம் என்பது யாருக்கு தான் பிடிக்காது. தேர்வு சமயங்களில் அல்லது பள்ளி செல்லும் சமயங்களில் படிக்காமல், பள்ளிக் கிளம்பாமல் தூங்கும் தன் குழந்தைகளை கண்டிக்க தாய் தவறுவதில்லை. தூங்கட்டுமே என இரக்கமும் காட்டுவதில்லை. 

யானைகள் உட்பட அனைத்து உயிரினங்களின் மிக விருப்பமான செயல்களில் ஒன்று தூங்குவது. குட்டி யானை நன்றாக தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிலும் தனது குட்டியின் தூக்கத்தை கலைக்க பெரும் முயற்சி எடுத்த தாய் அயானை கடைசியில் முடியாமல், மமிருககாட்சி சாலையின் பாதுகாவலரை இழுத்து வந்து எழுப்ப வைக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

அந்த வீடியோவை ட்விட்டரில் @buitengebieden என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது, "தாய் யானையால் குட்டியை தூக்கத்தில் எழுப்ப முடியாமல், காவலர்களிடம் உதவி கேட்கிறது.." என அதில் பதிவிடப்பட்டுள்ளது.

வீடியோவை இங்கே காணலாம்:

 

வீடியோவில் ஒரு தாய் யானை தனது குட்டியை எழுப்ப முயற்சிப்பதையும், அதில் தோல்வி அடைந்த தாய், பின்னர் உதவிக்காக மருக காட்சி காப்பாளரை அழைத்து வருவதையும் காணலாம். குட்டி எழுந்திருக்க பாதுகாவலர் அதனை உலுக்கி எழுப்புகிறார்.

குட்டி விழித்தவுடன் தன் தாயிடம் ஓடுகிறது. குட்டி யானையின் மனதை கவரும் செயல் சமூக ஊடகங்களில் பல இதயங்களை வென்றது. ட்விட்டரில் 5.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி, 47 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ உங்கள் முகத்திலும் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும். 

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News