கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!

Snake Swallowing Egg: நீங்கள் திரைப்படங்களில் பாம்புகள் வேட்டையாடுவதை பார்த்திருக்கலாம். அதில் பெரும்பாலும் பாம்பே வெற்றியும் பெறும். முட்டை பாம்பிற்கு மிகவும் பிடித்த உணவு.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 2, 2023, 12:32 PM IST
  • பாம்பு என்றால் படையே நடுங்கும்.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • பாம்பின் வேட்டை வீடியோ.
கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி! title=

இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம்.  சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இது பாம்பின் வேட்டை வீடியோ. 

நீங்கள் திரைப்படங்களில் பாம்புகள் வேட்டையாடுவதை பார்த்திருக்கலாம். அதில் பெரும்பாலும் பாம்பே வெற்றியும் பெறும். முட்டை பாம்பிற்கு மிகவும் பிடித்த உணவு. இந்நிலையில் வைரலாகும் இந்த வீடியோவில், முட்டையை திருடுவதற்காக, கூடைக்குள் நுழைந்த பாம்பு, வாயில் முட்டையுடன் கூடையில் சிக்கிய பாம்பை காணலாம். உயரத்தில் முட்டையுடன் கூடிய கூடை வைத்திருந்த நிலையில், அதனை சாப்பிட பாம்பு அங்கு வந்துள்ளது. மேலும் ஒரு பாம்பு முட்டைகளுக்கு அருகில் எளிதாக் செல்கிறது. கூடையின் பக்கங்களில் உள்ள துளைகள் மூலம் பாம்பு அதன் முகத்தையும் அதன் உடலின் ஒரு சிறிய பகுதியையும் நுழைத்துக் கொண்டு செல்கிறது. இருப்பினும், அது முட்டையை விழுங்கியபோது, அதன் தொண்டை பகுதி பெரிதானதாக், கூடையிலிருந்து வாயை வெளியே எடுக்க முடியவில்லை. முட்டையைக் கைவிடாமல் கூடையிலிருந்து வெளியேற பாம்பு போராடுவது வீடியோவில் காணலாம். இறுதியில், பாம்பு முட்டையை வெளியே துப்ப வேண்டி இருந்தது.

மேலும்  படிக்க | Viral Video: இந்த ஏரியாவுல இனி உன்னை பார்த்தேன்... காதலிக்காக ஆக்கிரோஷமாக சண்டையிடும் ராஜநாகம்!

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்: 

இதற்கு நேர்மாறாக, தவளை  ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ வைரலானது. ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வித்தியாசமான மற்றும் திகிலூட்டும் வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுமார் 2 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருந்தது. இந்த வீடியோவில் தவளை மெதுவாக பாம்பை ரசித்து ருசித்து பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதைக் காணலாம். கிட்டத்தட்ட ஒரு நூடுல்ஸை சுவைப்பதை போல் மெதுவாக உண்கிறது.  பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். விலங்குகளில் பலவும் கூட பாம்பை சீண்டி பார்க்கும் தைரியத்தை கொண்டிருப்பதில்லை. பாம்பின் பெயரை கேட்டால் எட்டாத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News