ஓடிய மாப்பிள்ளை, துரத்திய மணப்பெண்: காரணம் என்ன? வைரல் வீடியோ

Funny Wedding Video: நடு ரோட்டில் மணமகனை மணமகள் துரத்திச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மாப்பிள்ளையை பெண் ஏன் துரத்தினார்? இதோ காரணம்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2022, 06:18 PM IST
  • இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம்.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
  • இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன.
ஓடிய மாப்பிள்ளை, துரத்திய மணப்பெண்: காரணம் என்ன? வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன.

பெரும்பாலான இந்திய திருமணங்கள் மசாலா திரைபடங்களை போலவே இருக்கும். செண்டிமெண்டல் டிராமா, அன்பு, பாசம், சஸ்பென்ஸ், சோகம் என அனைத்து கூறுகளும் இவற்றில் காணப்படும். திருமணங்களில் எந்த உணர்ச்சிகளுக்கும் குறைவிருக்காது. இந்தியாவில் பல விதங்களில் திருமணங்கள் நடக்கின்றன. இவற்றில் பல வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களும் நடக்கின்றன. 

தற்போதும் மிக வினோதமான திருமண வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பீகாரின் நவாடாவில் நடந்துள்ளது. இதில் ஒரு மணப்பெண் தனது மாப்பிள்ளையை நடுரோட்டில் திரைப்பட பாணியில் துரத்துவதைக் காண முடிகின்றது. நவாடாவில் உள்ள பகத் சிங் சௌக்கில், சந்தையில் மாப்பிள்ளையைக் கண்டதும் அந்தப் பெண்மணி அவரைப் பின்தொடர்ந்து ஓடிய சம்பவம் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் மணமகன் தப்பிக்க முயல்வதையும் வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகின்றது. ஆனால், அந்த பெண் பிடிவாதமாக இருக்கிறார். மணமகனை பிடிக்கு பெண் அவரிடம் கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க | வம்பிழுத்துவிட்டு பயந்தோடும் யானைக்குட்டி! க்யூட் வீடியோ வைரல்! 

மணமகன் பின்னால் மணப்பெண் ஓடும் வீடியோவை இங்கே காணலாம்: 

 

ஊடக அறிக்கையின்படி, பெண்ணின் குடும்பத்தினர் அந்த திருமணம் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினர். மணமகனின் குடும்பத்துக்கு ஒரு பைக் மற்றும் 50,000 ரூபாயும் வரதட்சணையாக வழங்கப்பட்டது. ஆனால், மணமகன் சாக்கு சொல்லி திருமணத்தை தாமதப்படுத்தினார். 

ஆகையால், மணமகள் அந்த நபரைப் பார்த்ததும், அவரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதனால், குடும்ப விவகாரம் சாலைக்கு வந்தது. மணமகள் மணமகனை துரத்திச் சென்றது, சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில், இந்த விஷயத்தில் போலீசார் தலையிட வேண்டியிருந்தது. இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஆலோசனை நடத்திய போலீஸார், மாப்பிள்ளை வீட்டாருக்கு பேசி புரிய வைத்தனர். பின்னர், மணமகன் வீட்டார் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். இறுதியாக அந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் காவல் நிலையத்தை அடுத்துள்ள கோவிலில் திருமணம் நடந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாப்பிள்ளையிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பெண் கெஞ்சுவது வருத்தமாக இருந்தாலும், இறுதியில் எல்லாம் நன்றாக முடிந்ததால் நிம்மதி கிடைக்கிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் உள்ளது. இந்த வீடியோவுக்கு பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | தாயுமானவராய் மாறிய ரிக்‌ஷா ஓட்டுநர்! இதோ ஒரு ஆண் தேவதை என பாராட்டும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News