கும்பத்தில் இருக்கும் சனி பகவானால் 2 ஆண்டுகளில் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ராசியான கும்பத்தில் சனி பகவான் வீற்றிருப்பதால், சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் பிறந்திருக்கிறது.  2025 ஆம் ஆண்டு வரை இந்த யோகம் அவர்களுக்கு இருப்பதால் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை அவர்கள் சந்திக்கப்போகிறார்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2023, 06:03 AM IST
  • சனி பெயர்ச்சியால் யோகம்
  • 3 ராசிகள் கோடீஸ்வரர் ஆகலாம்
  • 2 ஆண்டுகள் அதிர்ஷ்ட காலம்
கும்பத்தில் இருக்கும் சனி பகவானால் 2 ஆண்டுகளில் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் title=

சனி பகவானைப் பொறுத்தவரை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற கணக்கில் தான் ஒருவருக்கான பலன்களை அருள்பாளிக்கிறார். நீதியின் கடவுளாக பார்க்கப்படும் அவர் ஒருவர் தவறு செய்தால் அதற்குரிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பது தான் அவருடைய கணக்கு. அவரின் நல்ல பார்வை சிலர் மீது பட்டுவிட்டால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றி எல்லாம் சும்மா நடந்து சென்றால் கூட தேடி வரும். போகிறபோக்கில் ஜாக்பாட் பெற்று வாழ்க்கையில் நிம்மதி மற்றும் செல்வத்தின் உச்சத்தில் இருப்பார்கள். 

அப்படியான அமோக வாழ்க்கையை கொடுக்கும் சனி பகவான் இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சொந்த வீடான கும்பத்தில் இருக்கிறார். 2025 வரை அங்கு அவர் இருப்பதால் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் பிறந்திருக்கிறது. இந்த காலத்தில் அவர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி வெற்றி என எல்லாமே தேடி வரும். 2 ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம். இந்த காலத்தில் கிடைக்கும் அனைத்து பலன்களும் வாழ்க்கை முழுவதும் வரும் என்பதால் தலைகீழ் மாற்றத்தில் கோடீஸ்வரராகப்போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம். 

மேலும் படிக்க | புதனால் உருவான ராஜயோகம்: இனி ராக்கெட் வேகத்தில வாழ்க்கை உயரும்

ரிஷபம்: 

கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சனி இவர்களுக்கு 2025 வரை கருணையுடன் இருப்பார் மற்றும் அவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்வார். வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பதவி, கௌரவம், மரியாதை கிடைக்கும். பணம் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். சனிப் பெயர்ச்சியால் 2025 வரை இந்த ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட விஷயங்களிலும் தொழில் விஷயங்களிலும் அனுகூலமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.

சிம்ம ராசி:

2025 வரை சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி மிகவும் அன்பாக இருப்பார். அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன், உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார ஆதாயம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதால் பல பிரச்சனைகள் தீரும். கூட்டாண்மை நன்மை தரும். உத்தியோகத்தில் பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 2025 வரையிலான காலம் திருமணமானவர்களுக்கும் நன்றாக இருக்கும். இந்த நேரம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் ஆடம்பரத்தை அதிகரிக்கும் என்று கூறலாம்.

துலாம்: 

கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இந்த காலம் இவர்களுக்கு பணம், பதவி, கௌரவம், அன்பு அனைத்தையும் கொடுக்கும். தொழில் மற்றும் நிதி ரீதியாக நீங்கள் நிறைய முன்னேற்றம் அடைவீர்கள். வேலை-வியாபாரத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வாழ்வில் வளம் பெருகும். ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்கள் சிறந்த காதலிகளாக இருப்பார்களாம்..! யார் அந்த காதல் தேவதைகள்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News