பரணி நட்சத்திரத்தில் குரு: நவம்பர் வரை இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்

Guru Nakshatra Transit: குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை இது பிரகாசமாக்கும். இந்த ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2023, 01:02 PM IST
  • பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களை தரும்.
  • இந்த காலத்தில் இவர்களுக்கு அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும்.
பரணி நட்சத்திரத்தில் குரு: நவம்பர் வரை இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம் title=

குருவின் நட்சத்திர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில் 12 ராசிகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது போலவே 27 நட்சத்திரங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இது மட்டுமின்றி கிரகங்கள் தங்கள் இயக்கங்களையும் உதய மற்றும் அஸ்தமன நிலைகளையும் மாற்றுகின்றன. இவை அனைத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.

குருவின் நட்சத்திர மாற்றம்

அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுவதை போல, அவ்வப்போது வெவ்வேறு நட்சத்திரங்களிலும் பெயர்ச்சி ஆகின்றன. கிரகங்களின் அதிபதியாகக் கருதப்படும் குரு பகவான் பற்றி நாம் பேசினால், அவர் தனது ராசியை மாற்றிவிட்டார். ஆனால் அவர் சமீபத்தில் தனது நட்சத்திரத்தையும் மாற்றியுள்ளார். 

பரணி நட்சத்திரத்தில் நுழைந்த குரு பகவான்

குரு பகவான் ஜூன் 21ம் தேதி மதியம் 1.19 மணிக்கு பரணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். நவம்பர் 27 வரை இங்கு தங்கியிருப்பார். அதன் பிறகு அவர் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைவார். அவருடைய இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை இது பிரகாசமாக்கும். இந்த ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் நன்மை அடையப்போகும் ராசிகள்:

மேஷ ராசி

குருவின் இந்த நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும். இந்த காலத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். ஒரு பெரிய ஒப்பந்தத்தை நீங்கள் வெர்றிகரமாக முடிக்கக்கூடும். இந்த பெயர்ச்சியின் போது கணிசமான பண ஆதாயம் கிடைக்கும். அதன் காரணமாக பொருளாதார நிலை வலுப்பெறும்.

மகர ராசி

பரணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகியுள்ள குரு பகவான் மகர ராசிக்கு சாதகமான பலன்களைத் தருவார். இந்த நேரத்தில் மரியாதை அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பாராட்டுகள் குவியும். கல்வித்துறையில் தொடர்புடையவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். உயர் அதிகாரிகளுடனான தொடர்புகள் சுமுகமாக இருக்கும். 

மேலும் படிக்க | சிம்மத்தில் குரு - செவ்வாய்... நவபஞ்சம ராஜயோகம் பெறும் ‘சில’ ராசிகள்!

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த நக்ஷத்ரா பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இதன் காரணமாக தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். 

துலா ராசி

துலா ராசிக்காரர்கள் குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் பல நன்மைகளைப் பெறுவார்கள். இந்த காலத்தில்  முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த நிறுவனம் வைத்திருப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இதன் காரணமாக மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு ராசி

பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களை தரும். இந்த காலத்தில் இவர்களுக்கு அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். வருமானம் பெருகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிவனும் சனியும் சேர்ந்து அருள்பொழியும் அபூர்வ யோகம்: ஆகஸ்ட் வரை 4 ராசிகளுக்கு கொண்டாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News