Astro: மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க... சில எளிய ஜோதிட பரிகாரங்கள்!

Astro Remedies: கல்வி தான் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். கல்வி செல்வம் கிடைத்தால் போதும், அவர்கள் வாழ்க்கையில் எல்லா வகையிலும், வெற்றிகளை எளிதாக பெற்று சாதித்து விடுவார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2024, 08:04 PM IST
Astro: மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க... சில எளிய ஜோதிட பரிகாரங்கள்! title=

இன்றைய காலக்கட்டத்தில் கல்வி தான் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். கல்வி செல்வம் கிடைத்தால் போதும், அவர்கள் வாழ்க்கையில் எல்லா வகையிலும், வெற்றிகளை எளிதாக பெற்று சாதித்து விடுவார்கள். தேர்வுகளில் சிறந்த வகையில் வெற்றி பெறுவார்கள் திறமையினால் வாழ்க்கையை ஜெயித்து விடுவார்கள். குழந்தைகளுக்கு கல்வி பரிபூரணமாக கிடைக்க புதன் கிரகத்தின் அனுகிரகம் மிகவும் முக்கியம். ஞானத்தை அள்ளித தரும் புதன் கிரகத்தின் அனுகிரகம் முழுவதுமாக கிடைக்க அவருக்கு பிடித்த நிறமான பச்சை நிறத்தை அதிகம் பயன்படுத்துவது பலன் தரும். அதே போன்று புதன்கிழமை காலையில் எழுந்து குளித்த பிறகு சிறிதளவு பச்சை பயிரை பச்சை நிற துணியில் மூட்டையாக கட்டி விநாயகர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து வணங்க வந்தால் படிப்பில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். விநாயகர் கோவிலில் பாசி பயறை பச்சை துணியில் கட்டி பூஜை செய்தால் புதனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

புதன் கிரகம் வலுப்பெற பரிகாரங்கள்

நவகிரகங்களில் அறிவாற்றல், புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு, மூளை ஆற்றல், செயல்திறன் ஆகியவற்றிற்கு காரணமாக இருக்கும் புதன் பகவான் ஜாதகத்தில் வலுப்பெற புதன்கிழமைகளில் பசுவிற்கு தீவனம் கொடுக்கவும். மேலும், துளசி செடிக்கு, தினமும் பூஜை செய்து வந்தால் படிப்பில் சிறந்து விளங்கலாம். புதன்கிழமை அன்று துர்கா அம்மன் கோவிலுக்குச் சென்று பச்சை வளையலை அம்மனுக்கு அணிவித்து வணங்கவும். புதன்கிழமையன்று 'ஓம் பும் புதாய நமஹ்' அல்லது 'ஓம் ப்ராம் பிரம் பிரவுன் எஸ்: புதாய நமஹ்' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதும் பலன் கொடுக்கும்.

கேது தோஷம் நீங்க பரிகாரம்

சில குழந்தைகளுக்கு, மந்த நிலை இருக்கும். படிப்பு சரியாக வராமல் இருக்கலாம். கிரகநிலை மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கேது பகவான் தொடர்பான கிரக நிலை கோளாறுகள் படிப்பில் மந்த நிலைக்கான முக்கிய காரணம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கேது பகவானுக்கு உகந்த தானியம் கொள்ளு. கேது பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கேதுவுக்கு கொள்ளை படைத்து பரிகாரத்தை செய்வது சிறப்பு. இதனால், மாணவர்கள் மந்த நிலை நீங்கி, படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

மேலும் படிக்க | ஏப்ரலில் மிகப்பெரிய கிரக மாற்றங்கள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்

மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நேரம்

தற்போது மாணவர்கள் பெரும்பாலும் இரவில் படிக்க விரும்புகிறார்கள். ஆனால் இதனால், தூக்கம் பாதிக்கப்பட்டு, நினைவு திறன் குறைவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பிரம்ம முஹூர்த்த நேரம் படிப்பிற்கு சிறந்தது. மனது புத்துணர்ச்சியுடன் இருப்பதால், படிப்பது நன்றாக மனதில் பதியும். ஏனென்றால் மூளையின் நினைவக அமைப்பு காலை நேரத்தில் மிக சுறுசுறுப்பாக இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதற்கான வாஸ்து குறிப்புகள்

மாணவர்கள் படிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி வாஸ்து குறிப்பில் கூறப்பட்டுள்ளது. படிக்கும் போதுஎப்போதும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்திருக்க வேண்டும். இதன் மூலம் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். மனம் படிப்பில் நன்றாக ஈடுபட உதவும். படிக்க தொடங்கும் முன், வடக்கு திசையை நோக்கி ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வதும் பலனளிக்கும். அதே போல் குழந்தைகள் படிக்கும் அறையில் பச்சை நிறம் இருப்பது அவசியம். ஏதாவது சிறிய வகை செடிகளை அந்த அறையில் வைத்து வளர்க்கலாம். குழந்தைகள் படிக்கும் அறையில் சரஸ்வதி தாயாரின் படத்தை வைத்து வணங்கி விட்டு, தினமும் படிக்க தொடங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sun Transit 2024: சூரியபெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News