Astro: கடன் தொல்லை தீர, வருமானம் பெருக... எளிய ‘செம்பருத்தி பூ’ பரிகாரங்கள்!

Astro Remedies For Wealthy Life: சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிற செம்பருத்தி பூ, பல்வேறு மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 14, 2024, 03:38 PM IST
  • கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், வருமானம் பெருகவும் பரிகாரம்.
  • வீட்டில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி நிலைத்திருக்க பரிகாரம்.
  • கணவன்-மனைவி இடையே அன்பையும் நல்லிணக்கத்தையும் அதிகரிப்பதற்கான பரிகாரம்.
Astro: கடன் தொல்லை தீர, வருமானம் பெருக... எளிய ‘செம்பருத்தி பூ’ பரிகாரங்கள்! title=

Astro Remedies For Wealthy Life: சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிற செம்பருத்தி பூ, பல்வேறு மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில செப்பருத்தி பூ பரிகாரங்கள்  மூலம் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு பெருகும். ஏனெனில் செம்பருத்தி பூக்கள் நேர்மறை ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகின்றன. 

எனவே, உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீச, செல்வம் குறையாமல் இருக்க, அனைத்திலும் வெற்றிகளை குவிக்க, நீங்கள் நிச்சயமாக செம்பருத்தி பூவின் உதவியுடன் சில பரிகாரங்களை முயற்சிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி விடும், பணத்திற்கு பஞ்சம் இருக்காது. வாஸ்து சாஸ்திரப்படி செம்பருத்திப் பூவிற்குரிய பரிகாரங்களைத் (Astro Remedies) தெரிந்து கொள்வோம்.

கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், வருமானம் பெருகவும் பரிகாரம்

கடனில் இருந்து விடுபட வேண்டுமானால், வருமானம் அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு மிக எளிதான பரிகாரம் உள்ளது. வெள்ளிக்கிழமையன்று, விநாயகப் பெருமானையும் துர்கா அன்னையையும் செம்பருத்தி பூவை சம்பர்பித்து வணங்கி பூஜை செய்த பிறகு, பூஜையில் வைத்த ஐந்து செம்பருத்திப் பூக்களை உங்கள் பெட்டகத்திலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைக்கவும். குறைந்தது 7 நாட்களுக்கு இதைச் செய்யுங்கள். இதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகி நீங்கள் கடனில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம். 

நிதி நெருக்கடி தீர பரிகாரம்

உங்கள் வீட்டில் எப்பொழுதும் பணத் தட்டுப்பாடு இருந்தால் கண்டிப்பாக செம்பருத்திப் பூவைப் பயன்படுத்தி பரிகாரம் செய்யுங்கள். சூரியக் கடவுளை வணங்கும் போது செம்பருத்திப் பூவைச் சமர்ப்பிக்க வேண்டும். செம்புக் கலசத்தில் செம்பருத்திப் பூவை வைத்து அதில் தண்ணீர் நிரப்பி சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை என்பதே ஏற்படாது.

மேலும் படிக்க | Astro: தீராத நோயினால் அவதிப்படுகிறீர்களா... சில எளிய பரிகாரங்கள்!

வீட்டில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி நிலைத்திருக்க பரிகாரம்

செம்பருத்தி செடியை நட்டால் உங்கள் வீட்டில் நேர்மரை ஆற்றல் நிறைந்து இருக்கும். உங்களுடைய வீட்டின் மேற்கு அல்லது தெற்கு திசைகளில் செம்பருத்தி பூ செடி வைப்பது மிக நல்லது. செம்பருத்தி பூ செடி சிவப்பு நிற ஒற்றை செம்பருத்தி பூ செடியாக இருக்க வேண்டும்.  இது உங்கள் வீட்டில் நேர்மறையை உருவாக்குகிறது. ஆனால் செம்பருத்தி செடி வறண்டு போகக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கணவன்-மனைவி இடையே அன்பையும் நல்லிணக்கத்தையும் அதிகரிப்பதற்கான பரிகாரம்

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகளை நீக்கவும் செம்பருத்தி பூ பரிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே ஏதாவது ஒரு பிரச்சினையில் எப்போதும் சண்டை ஏற்பட்டு வந்தாலும், பல முயற்சிகள் செய்தும் பரஸ்பர புரிதல் உங்களுக்குள் ஏற்படவில்லை என்றாலும், நீங்கள் உங்கள் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூவை வைத்துக் கொண்டு தூங்குவது பலன் அளிக்கும். இது உங்களிடையே காதல் உணர்வை ஏற்படுத்தும்.

வேலை மற்றும் தொழில் வெற்றிக்கான பரிகாரங்கள்

வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், லட்சுமி தேவிக்கு செம்பருத்திப் பூவினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம், லக்ஷ்மி தேவியின் கணிவான பார்வை உங்கள் மீது எப்போதும் இருக்கும். நீங்கள்  வாழ்க்கையில் எப்போதும் முன்னேற்றம் அடைவீர்கள்.

சிவப்பு நிற செம்பருத்தி பூக்களை பறித்து வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் கடவுளுக்கு அர்ப்பணித்து மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களது வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கான வேண்டுதல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எதையுமே நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Astro: மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க... சில எளிய ஜோதிட பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News