Astro Predictions: இறப்பை கணிக்கும் ஜாதகத்தின் எட்டாம் பாவகமும் கேதுவின் தாக்கமும்

ஒருவரின் ஜாதகத்தின் எட்டாம் பாவகம் மரண ரகசியத்தை நுணுக்கமாக சொல்கிறது. பிரம்ம ரகசியத்தின் திறவுகோல் எட்டாம் பாவகத்தில் மறைந்திருக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2022, 11:05 PM IST
  • ஜோதிட ரீதியாக இறப்பை கணக்கிடும் பாவகங்கள்
  • கிரகங்களில் மாரகக் காரகர் சனீஸ்வரர்
  • சனீஸ்வரரைத் தவிர கேது பகவானின் இருப்பைக் கொண்டு மரணத்தை கணிக்கலாம்
Astro Predictions: இறப்பை கணிக்கும் ஜாதகத்தின் எட்டாம் பாவகமும் கேதுவின் தாக்கமும் title=

புதுடெல்லி: மனிதர்களுக்கு எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். அதிலும் எத்தனை ஆண்டுகள் உயிருடன் இருப்பேன் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை இல்லாதவர்கள் யாராவது உண்டா? 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தின் எட்டாம் பாவகம், இந்த ரகசியத்தை நுணுக்கமாக சொல்கிறது. பிரம்ம ரகசியத்தின் திறவுகோல் எட்டாம் பாவகத்தில் மறைந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஜாதகத்தின் எட்டாம் பாவகமானது, ஆயுதங்களால் உண்டாகும் காயம், கொடிய நோய், காரியத் தடை, நீங்காத கவலை, துன்பம், அவமானம், நஷ்டம், நீங்காத பகை, வீண் அலைச்சல் என பல விஷயங்களை கணித்து சொல்கிறது.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த ராசிக்காரர்கள் மீது சனியின் அருள்மழை

அதேபோல, லக்னாதிபதியும் அஷ்டாமதிபதியும் பத்தாமிடத்தின் அதிபதியும் சூரியனுடன் கூடி அதுவும் கேந்திரத்தில் இருந்தாள் தீர்க்க ஆயுள் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்.

சனீஸ்வரர் தான் ஆயுள்காரகன் என்றாலும், நவகிரகங்களில் எஞ்சிய எட்டு கிரகங்களும் ஒரு ஜாதகரின் ஆயுளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  

அதேபோல், கிரகங்கள் ஒவ்வொன்றின் உச்ச நீச்ச காலங்களுக்கு ஏற்ப ஜாதகருக்கு ஆயுள் கூடுவதும் குறைவதும் என வாழும் காலம் மாறுபடும். அதிலும் கிரகங்கள் பெற்றிருக்கும் பார்வைகளும் கணக்கில் எடுத்துக் கொண்டே ஒருவரின் ஆயுளை கணிக்க முடியும். 

ஆயுள் தொடர்பான நன்மை தீமைகளைக் கணக்கிடுவதில் நான்கு ஹரணங்கள் உண்டு என்று ஜோதிடம் வகுத்துள்ளது. அவை, சக்ரபாத ஹரணம், சதுர்ஷேத்ர ஹரணம், அஸ்தங்க ஹரணம், க்ரோதய ஹரணம் ஆகும். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: நிதி நெருக்கடி, நஷ்டத்தை எதிர்கொள்ளவுள்ள 5 ராசிகள் இவைதான்

லக்னம் எந்த திரேக்காணத்தில் இருக்கிறது என்பதை கணக்கிட்டு, அதிலிருந்து 22 ம் திரேக்காணம்த்தை கணக்கில் கொண்டு, அதன் அதிபதியினைக் கொண்டு கணக்கிட்டு மரணம் எப்படி நிகழும் என்றும் சொல்ல முடியுமாம்.

இந்தக் கணக்கீடுகளில் அந்த 22 ம் திரேக்காணத்தின் அதிபதி ஜனன ஜாதகத்தில் என்ன நிலை என்பதும் கோச்சாரத்தில் மாரகக் காரகருடன் தொடர்பு கொள்ளும் தன்மையும் கணக்கிட்டால் ஆயுளை சரியாக கணக்கிட முடியும் என்பது ஜோதிடம் வகுத்திருக்கும் நீண்ட கணக்கீடுகள் ஆகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அக்டோபர் 23 வரை சனி வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News