சோபகிருது ஆண்டு மாசி 18ம் நாள் ராசிபலன்! நல்ல காலம் பொறக்குது, கவலை வேண்டாம்...

Rasipalan 01-03-2024 : என்ன நடக்கப் போகிறது என தெரிந்து கொண்டு இன்றைய நாளைத் தொடங்குவது நல்லது... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையா aஎன்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்குவோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 1, 2024, 05:47 AM IST
  • 5 ராசிகளுக்கு அருமையான நாள்
  • மேஷ ராசிக்காரருக்கு நிதானம் அவசியம்
  • கடக ராசியினருக்கு பயணத்தில் கவனம் தேவை
சோபகிருது ஆண்டு மாசி 18ம் நாள் ராசிபலன்! நல்ல காலம் பொறக்குது, கவலை வேண்டாம்... title=

இன்று சோபகிருது ஆண்டு, மாசி மாதம் 18ம் நாள். இன்றைய நாள் நல்ல நாளாக மலரட்டும். என்ன நடக்கப் போகிறது என தெரிந்து கொண்டு இன்றைய நாளைத் தொடங்கினால் அது புத்திசாலித்தனமானதாக இருக்கும்... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா என்பதை அறிந்துக்கொண்டு இந்த நாளைத் தொடங்குவோம்...

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் - (01-03-2024)

மேஷம் 

குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். நிறை, குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். 

ரிஷபம் 
வியாபாரம் சார்ந்த பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும், உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.  

மிதுனம் 
 வியாபார இடமாற்ற முயற்சிகளில் எதிர்பாராத சிலரின் சந்திப்பு ஏற்படும். வேலையாட்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். கவலைகள் குறையும் வாய்ப்புகள் ஏற்படும்

கடகம் 
கடக ராசிக்காரர்களுக்கு  உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்களால் புதிய நம்பிக்கைப் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டு

சிம்மம் 
வீடு மற்றும் வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும்புதிய வாகன முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.  சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும்.   

மேலும் படிக்க | சனி உதயத்தால் இந்த ராசிகளுக்கு சனி தோஷ நிவாரணம்: இனி

கன்னி

உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். உத்தியோகப் பணிகளில் மாற்றமும், மனதில் சோர்வும் ஏற்படும்

துலாம் 
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்த காரியங்களை நினைத்தவாறே செய்ய முடியுமா என்றால், அதில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவசியம் என்பது புரியும் நாள்

விருச்சிகம் 
வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும்.

தனுசு 
மனதளவில் உற்சாகம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். இடம் வாங்குவதற்கான வாய்ப்புகளை தவறவிடவேண்டாம்.

மகரம் 
சவாலான பணி சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும்

கும்பம் 
வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புதிய வேலைக்கான வாய்ப்பு சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் உயர்வு உண்டாகும்.  

மீனம் 
சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்பட்டாலும், உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | மார்ச் மாத அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: பணம், புகழ், பதவி... அனைத்தும் இவர்கள் வசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News