சுக்கிரன் உச்சம்.. சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு குபேர கோடீஸ்வர யோகம்

Venus Transit 2023 in Leo: செல்வம், ஆடம்பரம், பொருள் மகிழ்ச்சி மற்றும் அன்பு ஆகியவற்றைக் கொடுப்பவரான சுக்கிரன் விரைவில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 27, 2023, 12:13 PM IST
  • 4 ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அருள் பொழிவார்.
  • உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.
  • கார் அல்லது விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம்.
சுக்கிரன் உச்சம்.. சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு குபேர கோடீஸ்வர யோகம் title=

சிம்ம ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது, ​​சுக்கிரன் கடக ராசியில்  பயணித்து வருகிறார், வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி, 2023 அன்று, சுக்கிரன் கிரகம் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். சூரியனின் ராசியான சிம்மத்தில் சுக்கிரன் நுழைவதால் நான்கு ராசிக்காரர்கள் மிகுந்த பலன் அடைவார்கள். சுக்கிரனின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு அரசன் போன்ற வாழ்கையைத் அள்ளித் தரும். இந்த ராசி கொண்ட மக்களின் வாழ்க்கையில் பொருள் மகிழ்ச்சி பெருகும். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் வெற்றியும் செல்வமும் பெறுவார்கள். எனவே சிம்ம ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் எந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மாற்றத்தால் சுப பலன்கள் ஏற்படும்
அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை 1:02 மணிக்கு சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அதன் பிறகு அக்டோபர் 17ஆம் தேதி பூரம் நட்சத்திரத்திலும், அக்டோபர் 30ஆம் தேதி உத்திரம் நட்சத்திரத்திலும் நுழையும். அதன்பின் நவம்பர் 3 ஆம் தேதி வரை சிம்மத்தில் இருந்த சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடைவார். அதுவரை 4 ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அருள் பொழிவார்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி 2023.. நவம்பர் 4 இந்த ரசிகளுக்கு செல்வம் பெருகும்

கடக ராசி (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகவும் முன்னேறுவார்கள். இந்த நேரம் உங்களுக்கு குறிப்பாக நிதி ஆதாயங்களைக் கொண்டுவரும். பல வழிகளில் பணம் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். எந்தவொரு முக்கிய பொருள் ஆசையும் நிறைவேறும்.

துலாம் ராசி (Libra Zodiac Sign): துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் மற்றும் அக்டோபரில் நடைபெறும் சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு பதவி, பணம், கௌரவம் உள்ளிட்ட அனைத்தையும் தரும். உங்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். ஒவ்வொரு அடியிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் கார் அல்லது விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம்.

விருச்சிக ராசி (Scorpio Zodiac Sign): சுக்கிரனின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் பலன்களைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வணிக வகுப்பினர் சிறப்பான லாபத்தைப் பெறுவார்கள். புதிய பரிமாணத்தைத் தொடுவார்கள். தடங்களாகி வந்த காரியங்கள் அனைத்தும் இந்த காலக்கட்டத்தில் நிறைவேறும். நிலுவையில் இருந்த பணம் கிடைத்து நிம்மதி கிடைக்கும்.

தனுசு ராசி (Sagittarius Zodiac Sign): சுக்கிரன் சஞ்சாரத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அமையும். உங்கள் வேலையில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். திடீரென்று பணம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை) 

மேலும் படிக்க | முடிவுக்கு வருகிறது குரு - ராகு சேர்க்கை: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News