புதனின் வக்ர நிவர்த்தி... மேஷம் முதல் மீனம் வரை... புரட்டாசி மாதம் எப்படி இருக்கும்!!

Budhan Vakra Nivarthi: புதன் செப்டம்பர் 16 ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். ஜோதிட சாஸ்திரத்தில், புதன் ஒரு சுப கிரகமாக கருதப்படுகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2023, 04:57 PM IST
  • புதன் வக்ர நிவர்த்தி பலன்கள்.
  • ஜோதிட சாஸ்திரத்தில், புதன் ஒரு சுப கிரகமாக கருதப்படுகிறார்.
  • எந்தெந்த ராசிக்காரர்கள், பணம், செல்வம் ஆகியவற்றை அடைந்து மகிழ்ச்சி அடைவார்கள்?
புதனின் வக்ர நிவர்த்தி... மேஷம் முதல் மீனம் வரை... புரட்டாசி மாதம் எப்படி இருக்கும்!! title=

Budhan Vakra Nivarthi: செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் பார்வையில் புதனின் வக்ர நிவர்த்தி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. விநாயக சதுர்த்திக்கு முன் நடந்துள்ள இந்த மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், புதனின் இந்த வக்ர நிவர்த்தியினால், எந்தெந்த ராசிக்காரர்கள், பணம், செல்வம் ஆகியவற்றை அடைந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்

புதனின் வக்ர நிவர்த்தி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். மக்கள் உங்களை மதிப்பார்கள், சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். உங்கள் தொழிலில் சில சிறந்த வாய்ப்புகளையும் பெறலாம். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் சிரமப்படுபவர்களுக்கு இனி வரும் பாதை எளிதாக இருக்கும். சம்பளமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல இணக்கம் ஏற்படும். நிதி ஆதாயம் எதிர்பார்க்கப்படுகிறது. வேலைக்காக வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் 

புதனின் வக்ர நிவர்த்தி ரிஷப ராசியினரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் துணையுடனான உங்கள் உறவு மேம்படும், மேலும் உங்கள் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வணிக விஷயங்களில் நீங்கள் முக்கிய ஒப்பந்தத்தைப் பெறலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் நிதிப் பலன்களைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது உங்களின் பல தடைப்பட்ட திட்டங்களைத் திரும்பப் பெறலாம். 

மிதுனம்

மிதுன ராசிக்கு அதிபதியாக புதன் இருப்பதால், புதனின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு நல்ல பலனைத் தரும். பண விஷயத்தில் நிறைய லாபம் இருக்கும். நீங்கள் ஒரு லாட்டரியை வெல்லலாம் அல்லது எங்கிருந்தோ நிறைய பணம் பெறலாம். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கைக்கு வராமல் இருந்த பணம் அல்லது முன்னர் செய்த முதலீடுகளில் சிறந்த வருமானத்தைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு சிறந்த முடிவுகளைத் தருவதாகவும் கருதப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். எனினும், அவசரப்பட்டு எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுவது நிதி இழப்பை ஏற்படுத்தலாம். எனவே, ஒவ்வொரு விஷயத்திலும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள்.

கடகம்

புதனின் வக்ர நிவர்த்தி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் அவர்களின் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். கடன் தொகையும் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிகாரிகளைக் கவர சில கூடுதல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள் எந்த முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எந்த ஒரு வேலையையும் மிகுந்த சிந்தனையுடன் செய்யுங்கள்.

மேலும் படிக்க | மாம்பழப் போட்டியில் தம்பி முருகனை வென்ற கணபதியின் சந்திர பயணம்! பிள்ளையார் சதுர்த்தி

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் புதனின் வக்ர நிவர்த்தியினால், வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள் வந்து புதிய மகிழ்ச்சி பொங்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் தொழிலில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் மற்றும் உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்ய முடியும். திடீர் பணமும் கிடைக்கலாம். அலுவலகத்தில் சிறப்பான சூழல் நிலவும், புதிய வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நற்பெயர் உயரும், உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள். நீங்கள் வியாபாரம் செய்தால், நீங்கள் புதிய வணிகத் திட்டங்களை உருவாக்கலாம், அதில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் எதிரிகளுக்கு கடுமையான போட்டியை கொடுக்க முடியும். முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம், நீங்கள் சிறந்த வருமானத்தைப் பெறுவீர்கள்.

கன்னி 

புதனின் வக்ர நிவர்த்தி கன்னி ராசிக்காரர்களின் தொழிலில் நல்ல பலன்களை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. உங்கள் தொழிலில் பல சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளர்களைக் காணலாம். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும் மற்றும் உங்கள் செல்வம் அதிகரிக்கும். காதல் உறவுகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உறவில் உங்களுக்கிடையேயான தூரம் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம் 

புதனின் வக்ர நிவர்த்தி, துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் சம்பந்தமான நல்ல செய்திகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக வேலை மாற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும். வியாபாரத்தில் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எல்லாம் சீராக இருக்கும். உங்கள் தொழில் வெற்றியடைய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பார்கள் மற்றும் அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உறவுகளும் சுமுகமாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் சில பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சில விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் எல்லாமே உங்களுக்கு ஏற்றபடி நடக்காததால் நீங்கள் மிகவும் வருத்தப்படுவீர்கள். சில காரணங்களால் மனதில் ஏமாற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும், சம்பாதித்த பணம் விரயமாகும். உடல் நிலை சீராக இருக்கும். ஆரோக்கியமாக இருந்து எந்த வகையான ஒவ்வாமையையும் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்திக்கு மோதக நைவேத்தியம்! தொந்தி பிள்ளையாருக்கு ராகிக் கொழுக்கட்டை

தனுசு 

சிம்மத்தில் புதனின் வக்ர நிவர்த்தியினால், உங்களின் தொழிலில் பல வாய்ப்புகள் கிடைக்கலாம் மற்றும் வேலை மாற்றத்திற்கான உங்களின் காத்திருப்பு முடிவுக்கு வரலாம். வியாபாரத்தில் கூட, சில புதிய வேலைகளில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம், அதில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வெற்றிப் பாதையில் முன்னேறுவீர்கள். குடும்பத்தில் எல்லாம் நன்றாக இருக்கும், உங்கள் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையின் இந்த கட்டம் சற்று கடினமாக இருக்கும். தனிப்பட்ட வேலைப்பளு காரணமாக, உங்களால் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போகலாம், இதனால் உங்கள் அதிகாரிகள் உங்கள் மீது கோபப்படக்கூடும். திருமண வாழ்க்கையிலும் சிறிது கசப்பு ஏற்படலாம். பணத்தைப் பொறுத்தவரை, உங்கள் செலவுகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இரவில் உங்கள் தூக்கம் பாதிக்கப்படலாம்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இது மிகவும் அதிர்ஷ்டமான நேரம் மற்றும் முழுமுதற்கடவுள் கணபதியின் ஆசியுடன், உங்கள் வாழ்க்கையில் பல சிறந்த வாய்ப்புகள் வரக்கூடும். தடைபட்ட வேலைகளைச் தொடர இது ஒரு நல்ல நேரம் மற்றும் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். நீங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் சில புதிய முதலீட்டில் முதலீடு செய்யலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மீனம்

புதனின் வக்ர நிவர்த்தியினால், மீன ராசிகளுக்கு வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும், செல்வமும் நிறைந்திருக்கும். இதனால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம். வேலை செய்யும் இடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கூடும். மொத்தத்தில், புதனின் வக்ர நிவர்த்தி மீன ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி... ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் முதல் கொண்டாட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News