கடன் வாங்குவது என்பது பொதுவாகவே நடைமுறையில் செய்யக்கூடாத ஒரு விஷயமாகும். இதில், ஆன்மீகத்தின் படி குறிப்பாக செவ்வாய்கிழமைகளில் கடன் வாங்க கூடாது என்று கூறுவார்கள்.
செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்க கூடாதா?
இந்து மதத்தை பொறுத்தவரை செவ்வாய்க்கிழமை, செவ்வாய் கிரகத்தால் ஆட்சி செய்யப்படுகிறது என நம்பப்படுகிறது. இந்த நாளில் சிலர் பூமி கடவுளை வழிபடுவர். இதனால், நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என பலர் கருதுகின்றனர். இதனால் பல நல்ல மாற்றங்களும், சில திருப்பங்களை தரும் மாற்றங்களும் ஏற்படும்.
செவ்வாய் கிரகத்தின் இயல்பு:
செவ்வாய் கிரகத்தின் இயல்பு கரடு முரடாக இருக்கும். இந்த நாளில் பலர் அடிக்கடி சண்டையிடுவர், நிம்மதி இல்லாதது போல இருப்பர். அதற்கான காரணம், செவ்வாய் கிரகத்தின் இயல்பே இதுதான். இந்த நாளில் சிலர் கடன் வாங்க கூடாது என கூறுவர். இந்த நாளில் கடன் வாங்கினால் அதை அடைக்க நெடு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்த நாளில் கடன் வாங்கினால் கடன் தொகை வளர்ந்து கொண்டே போகுமே அன்றி, குறையாது என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இன்னும் 20 நாட்களே.. 2024ல் குருவால் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜ யோகம்
செவ்வாய்க்கிழமைகளில் செய்யவே கூடாத விஷயங்கள்:
>செவ்வாய்க்கிழமைகள் தங்க நகை வாங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், உங்கள் தங்க நகைகளை பிறருக்கு கொடுப்பதாலோ அடகு வைப்பதாலோ உங்கள் வீட்டில் கஷ்டம் வரும் என கூறப்படுகிறது.
>செவ்வாய் கிழமைகளில் எப்படி கடன் வாங்க கூடாதோ, அதே போல கடன் கொடுக்கவும் கூடாது.
>செவ்வாய் கிழமைகளில் சிகப்பு நிற உடை அணியக்கூடாது என ஜோதிடத்தின் படி கூறப்படுகிறது. இதனால், அந்த நாளில் சில எதிர்பாராத இன்னல்கள் நேருமாம்.
செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்கள்..
>செவ்வாய்க்கிழமைகளில் முருக பெருமானை வழிபடுவது நல்லது என கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் செல்வம் பெருகுமாம்.
>செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம், தர்ப்பண செய்யலாம் என்றும் இதனால் வாழ்வில் புண்ணியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
>செவ்வாய்க்கிழமைகளில் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | லட்சுமி தேவி அருளால் இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ