சாமி கும்பிடுவதுபோல் கனவு வந்தால் கஷ்டம் வருமா? இல்லை நல்ல செய்தியா?

சிலருக்கு அடிக்கடி சாமி கும்பிடுவது போல் கனவு வரும். திடீரென வரும் இந்த கனவால் மனம் குழம்பி போய்விடுவார்கள். என்ன அர்த்தம் என்றும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு இதுதான் அர்த்தம்  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 23, 2023, 07:38 PM IST
  • கனவில் கடவுள் வந்தால்
  • சீக்கிரம் கஷ்டம் வருமா?
  • நீங்கள் செய்ய வேண்டியது
சாமி கும்பிடுவதுபோல் கனவு வந்தால் கஷ்டம் வருமா? இல்லை நல்ல செய்தியா? title=

கனவு என்பது எல்லோருடைய ஆழ் மனதில் இருக்கும் சில விஷயங்கள் நிறைவேறாமல் போகும் பொழுது அது ஆழ்ந்த உறக்கத்திற்கு வந்து செல்லும் ஒரு பிம்பமாக இருக்கிறது. சில கனவுகள் நமக்கு புரியும் படியும், சில கனவுகள் நமக்கு சம்பந்தமே இல்லாமலும் இருக்கலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் அடிக்கடி தோன்றுவது நல்லதுக்கு தானாம்! அப்படி இருக்கும் பொழுது நம்முடைய கனவில் சாமி கும்பிடுவது போல நாம் கனவு கண்டால் என்ன பலன்? என்பதைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கனவில் விதவிதமான இடங்களில் நாம் இருப்பது போல நமக்கு தோன்றுவது நடக்கிறது. சில பேருக்கு நாம் வாழும் இல்லமும், சில பேருக்கு வாழ்ந்த இல்லமும், சிலருக்கு கோவில், நண்பர்கள் இல்லம், தெருக்கள், ஊர், வேறு நாடு என்று விதவிதமான இடங்களை சார்ந்த கனவுகள் வருவது உண்டு. அந்த இடங்களை நாம் இதற்கு முன் கண்டிருப்போம் அல்லது அந்த இடத்திற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாமலும் இருக்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் நீங்கள் இருந்தால் அது பூர்வ ஜென்ம பந்தம் என்று கூறப்படுகிறது. பூர்வ ஜென்மத்தில் அந்த இடத்திற்கும் உங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்க போய் தான் அந்த இடம் உங்களுக்கு கனவில் வருகிறதாம். அது போல ஒரு கோவிலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தெய்வ அருள் கிடைக்க போவதாக அர்த்தமாம்.

கோவிலில் இருந்து கொண்டு இறைவனை தரிசிக்கிறோம் என்றால் அதைவிட சிறந்த புண்ணியம் எதுவுமே இருக்க முடியாது. இது அவ்வளவு எளிதாக எல்லோருடைய கனவிலும் வந்து விடக்கூடிய கனவு அல்ல. இறைவனின் திருமுகம் உங்களுடைய கனவில் தெரிந்தால் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் வர காத்திருக்கிறது என்று அர்த்தம். கோவிலில் இருந்து கொண்டு நீங்கள் கைகூப்பி சாமி கும்பிடுவது போல கனவில் வந்தால் அடுத்த நாள் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அங்கு தான, தர்மங்களை செய்ய வேண்டுமாம். 

இப்படி செய்வதன் மூலம் உங்கள் ஆழ் மனதில் இருக்கக்கூடிய ஆசைகள் உடனே நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. எப்பொழுதும் இறை சிந்தனையுடன் இருக்கும் நபர்களுக்கு கூட இது போன்ற கனவுகள் வருவது இல்லை. ஆனால் திடீரென இது போன்ற தெய்வீக கனவுகள் உங்களுக்கு வந்தால் அது பேரதிர்ஷ்டமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் புண்ணிய காரியங்களை செய்ய வேண்டும் என்று இறைவன் உங்களுக்கு வலியுறுத்துவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

சாமி கும்பிடுவது போல கனவு வந்தாலும், இறைவனை காண்பது போல கனவு வந்தாலும் உடனே மறுநாள் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்து இறைவனை தரிசிக்க வேண்டும். உங்களுடைய இஷ்ட தெய்வமாக இருந்தாலும் சரி, குலதெய்வமாக இருந்தாலும் சரி இதை நீங்கள் செய்யலாம். பின்பு அந்த கோவிலில் வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், கலவை சாதங்கள், வெண்பொங்கல் என்று உங்களால் முடிந்த ஏதோ ஒரு சாதத்தை நைவேத்தியம் படைத்து பக்தர்களுக்கு தானம் கொடுத்து வந்தால் உங்களுடைய தீராத வேண்டுதல் நிச்சயம் தீரும்.

மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு, வக்ர குருவால் விபரீத யோகம், இந்த ராசிகளுக்கு பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News