சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தில் சூரியனைப் போல் பிரகாசிக்கும் ‘சில’ ராசிகள் இவை தான்!

சூரிய பெயர்ச்சி நவம்பர் 2022 : சூரிய கிரகம் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சி ஆகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 9, 2022, 01:19 PM IST
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
  • தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தில் சூரியனைப் போல் பிரகாசிக்கும் ‘சில’ ராசிகள் இவை தான்! title=

சூரிய பெயர்ச்சி நவம்பர் 2022 : சூரிய கிரகம் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சி ஆகிறது. சூரியனின் ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களைத் தருகிறது. நவம்பர் 16ம் தேதி மீண்டும் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மகரம்

சூரியன் இந்த ராசியின்11வது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்தக் காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். அதே சமயம் குழந்தைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் புதிய வெற்றிகளை குவிக்கலாம். தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்களையும் தரும்.

விருச்சிகம்

இந்த ராசியில் சூரியன் லக்னத்தில் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார் என்றும், பத்தாம் வீட்டின் அதிபதி சூரியன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சூரியனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், சுப பலன்களையும் தரப் போகிறது. இதனால் மதிப்பும்  மரியாதையும் அதிகரிக்கும். அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு, இந்த பெயர்ச்சி காலம் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன் நீண்ட நாட்களாக அரசுப் பணிக்குத் தயாராகி வருபவர்களும் இந்தக் காலத்தில் வெற்றி பெறுவார்கள்.

மேலும் படிக்க | சனி பகவான் அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!

கன்னி

சூரியன் இந்த ராசியின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த ராசிக்கு 12ம் வீட்டிற்கு அதிபதி சூரியன். சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி திளைக்கப் போகிறது. அந்த நபரின் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உத்தியோகத்திலோ அல்லது பணியிடத்திலோ உயர் அதிகாரிகளின் ஆதரவும் வருமானமும் அதிகரிக்கும்.

மிதுனம்

ஒரு கிரகத்தின் ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. சூரியன் மிதுன ராசியின் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சூரியனின் ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டிற்குச் செல்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். பெயர்ச்சி காலத்தின் போது சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்தக் காலத்தில் முதலீடு செய்வது நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம் ஏற்படலாம்!

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News