சனி பெயர்ச்சி: இந்த ராசியினர் இந்நேரத்தில் சொத்து வாங்கலாம்... செல்வமும் செழிக்கும்!

Saturn Transit 2023: கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் சஞ்சரித்துள்ளதால், பல ராசிகளுக்கு செல்வ செழிப்புமும் முன்னேற்றமும் உருவாகும். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 1, 2023, 06:16 PM IST
  • இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.
  • தடைப்பட்ட வேலைகள் தொடங்கும்
சனி பெயர்ச்சி: இந்த ராசியினர் இந்நேரத்தில் சொத்து வாங்கலாம்... செல்வமும் செழிக்கும்! title=

Saturn Transit 2023: ஜோதிடத்தின்படி, சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைந்தார். சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழையும்போது, ​​அதன் சுப பலன்கள், பல ராசிக்காரர்களிடம் காணப்படும். கும்ப லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி என்பதால், அந்த ராசிக்கு சனிபகவான் அருள்பாலிக்கிறார். அந்த ராசியில் சனி சஞ்சரிப்பதால் பல ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பும் முன்னேற்றமும் உருவாகும். எனவே, அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

மகரம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2025ஆம் ஆண்டு வரையிலான காலம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சாதகமாக அமையும். சனி பகவான் உங்கள் லக்னத்தின் அதிபதி. செல்வத்தின் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிதி நிலை மேம்படும். இதன்போது பண வரவு அதிகரிக்கும். பேச்சில் பலன் காணப்படும், இதன் காரணமாக மக்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | அட்சய திரிதியை இந்தாண்டு எப்போது வருது? நல்ல நேரம் எப்போது?

இந்த நேரத்தில் நீங்கள் முன்பை விட வலுவாகவும், தீவிரமாகவும், நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். இந்த நேரத்தில் வாகனம், சொத்து வாங்கலாம். பணியிடத்தில் முன்னேற்றம் மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.

தனுசு

இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கும்பத்தில் சனி சஞ்சரித்த ஏழரை வருடங்களில் இருந்து இந்த ராசிக்காரர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். அதே நேரத்தில் சனி இந்த ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். சனி இங்கே வலுப்பெற்ற நிலையில் இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெளிநாட்டில் இருந்து பயனடையலாம். நிலம் அல்லது சொத்துக்களை விற்பதிலும் வாங்குவதிலும் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் மூலம் லாபம் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சனி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். தடைப்பட்ட வேலைகள் தொடங்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் வேலை-வியாபாரம் காரணமாகவும் பயணம் செய்யலாம். அதே சமயம் வெளிநாட்டில் படிப்பவர்களின் விருப்பங்களும் விரைவில் நிறைவேறும்.

மேலும் படிக்க | எண் ‘8’ மற்றும் ‘ஏழரை’ சனீஸ்வரருக்கும் உள்ள தொடர்பு! எட்டுக்கு அருள்புரிவார் சனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News