அனுமனுக்கு பிடித்த ராசிகள்: சனியின் பிடியில் இருந்து தப்பிக்க வைத்து அருள் மழை பொழிவார்

Lord Hanuman Lucky Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ராசிகளில் அனுமனுக்கு பிடித்த ராசிகள் நான்கு ஆகும். இந்த நான்கு ராசிகளுக்கு அனுமனின் அருள் எப்போதுமே இருக்கும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 25, 2024, 04:34 PM IST
  • ஸ்ரீ ராமனின் மிகப் பெரிய பக்தரானவர் தான் அனுமன்.
  • சிவ பெருமான் அவதரித்த புதல்வன் தான் அனுமன்.
  • சில ராசிக்காரர்களுக்கு அனுமனின் அருள் எப்போதும் இருக்கும்.
அனுமனுக்கு பிடித்த ராசிகள்: சனியின் பிடியில் இருந்து தப்பிக்க வைத்து அருள் மழை பொழிவார் title=

Favourite Zodiac Signs of Lord Hanuman: ஸ்ரீ ராமனின் மிகப் பெரிய பக்தரானவர் தான் அனுமன். திரேதாயுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவர் தான் ஸ்ரீ ராமன். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு வாயு பகவானுக்கும், கந்தர்வ பெண்ணுக்கும் மகனாக சிவ பெருமான் அவதரித்த புதல்வன் தான் அனுமன் என பெயர் பெற்றார். அனுமனின் அருள் யாருக்கு உள்ளதோ அந்த நபருக்கு எந்த ஒரு பிரச்சனையையும் விரைவில் ஏற்படாது என்பது ஜோதிட நம்பிக்கை. 

அதிலும் சில ராசிக்காரர்களுக்கு அனுமனின் அருள் எப்போதும் இருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களிடம் எப்பொழுதும் அஞ்சினேயர் தனது கருணையை காட்டுக் கொண்டே இருப்பார். அதுமட்டுமின்றி ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆஞ்சநேயரை வணங்கினால் உடனடி தீர்வு கிடைக்கும். ஏனெனில் ஏழரை சனி பிடித்தவர்கள் அனுமனை வழிபாடு செய்வது நன்மையை தரும். இந்நிலையில் ஆஞ்சநேயரின் அருளை எப்போதுமே பெற்று வரும் ராசிகள் எவை என்று பார்ப்போம்…

அனுமனுக்கு பிடித்த ராசி மேஷம்: ஜோதிட சாஸ்திரப்படி, ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் ஒன்று மேஷம் ராசி. இந்த ராசிக்காரர்களுக்கு அனுமனின் சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் ஆஞ்சநேயரின் அருளால் வலுவான பண பலத்தை எப்போதும் பெறுவார்கள். மேலும் மன உறுதி வலுவாக இருக்கும். குடும்ப வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி திறமை, அறிவு, ஆற்றம், புத்திசாலித்தனம் போன்றவற்றால் மேஷ ராசிக்காரர்கள் பணத்தை சுலாமாக சம்பாதிக்கலாம். இது தவிர, இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடி வாழ்க்கையில் ஏற்படாது. 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: பதவி உயர்வு, பணபலம் சேரக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதான் 

அனுமனுக்கு பிடித்த ராசி சிம்மம்: ஆஞ்சநேயரின் சிறப்பான அருளை பெறும் அடுத்த ராசி சிம்ம ராசி ஆகும். இவர்களுக்கு அனுமனின் சிறப்பு ஆசி எப்போதுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆஞ்சநேயரைப் போல் இந்த ராசிக்காரர்களும் எப்போதும் கம்பீரமாகவும், பிரச்சனைகளை தீர்க்கும் திறமை கொண்டவர்களால் இருபார்கள். அதேபோல் பண வரவு எப்போதுமே இருக்கும், அதாவது பணத் தட்டுப்பாடு இவர்களின் அகராதியில் இருக்காது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அனுமனை வழிபடுவதால் பிரச்சனைகள் தீரும்.

அனுமனுக்கு பிடித்த ராசி விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களும் அனுமனின் அருள் எப்போதுமே இருக்கும். அனுமனின் அருளால் இந்த ராசிக்காரர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். கெட்டுப்போன வேலைகள் நொடியில் சரியாகிவிடும். இந்த ராசிக்காரர்கள் அனுமனை வழிபடுவதால் பல நன்மைகளை பெறுவார்கள். நிதி ஆதாரம் உண்டாகும்.

அனுமனுக்கு பிடித்த ராசி கும்பம்: கும்ப ராசிக்கும் சனி பகவான்தான் அதிபதி. சனி பெயர்ச்சி (Sani Peyarchi), ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆஞ்சநேயரை வழிப்படுவதால் தீர்வு கிடைக்கும். ஆஞ்சநேயர் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் அளிக்கிறார். மேலும், மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கையை பெறுவார்கள். நிதி நிலையும் எப்போதுமே சாதகமாகவே இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News