சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு நவம்பர் மாதம் அட்டகாசமாய் இருக்கும், வெற்றிகள் கைகூடும்

Venus Transit: சில ராசிகளுக்கு சுக்கிரனின் மாற்றத்தால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 28, 2023, 05:30 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பானதாக இருக்கும்.
  • வாழ்வில் அமைதி நிலவும்.
  • நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி இப்போது கிடைக்கும்.
சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு நவம்பர் மாதம் அட்டகாசமாய் இருக்கும், வெற்றிகள் கைகூடும் title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவம்பர் மாதத்தில் மிகவும் மங்களகரமான கிரகம் பெயர்ச்சி ஆகவுள்ளது. செல்வம், ஆடம்பரம், அன்பு, உலக இன்பம் ஆகியவற்றின் கிரகமான சுக்கிரன் நவம்பர் 3ஆம் தேதி பெயர்ச்சி ஆகவுள்ளார். சுக்கிரன் தற்போது இருக்கும் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இது தீபாவளிக்கு முன் நடக்கும் பெரிய ராசி மாற்றமாக கருதப்படுகிறது. பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளுக்கு சுக்கிரனின் மாற்றத்தால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான் 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பானதாக இருக்கும். வாழ்வில் அமைதி நிலவும். நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி இப்போது கிடைக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். சுக்கிரனின் செல்வாக்கு வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும். வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி... நவம்பர் முதல் ‘இந்த’ ராசிகளுக்கு கொண்டாட்டம்!

ரிஷப ராசி (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பரில் அதிர்ஷ்டம் கூடும். இதுவரை முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பண வரவு அதிகமாக இருக்கும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள காரியங்களிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசைகள் நிறைவேறும், நிதி நிலை மேம்படும்.

மிதுன ராசி (Gemini)

சுக்கிரனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தை கொண்டு வரும். குறைவான முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பண லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிக்கிய பணத்தைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் நிதி நிலைமை மேம்படும். ஏதேனும் சட்ட தகராறு இருந்தால், அந்த முடிவு உங்களுக்கு சாதகமாக வருவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

கடக ராசி (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் அதிக முன்னேற்றத்தை அடைவார்கள். இந்த நேரம் இவர்களுக்கு குறிப்பாக நிதி ஆதாயங்களைக் கொண்டுவரும். பல வழிகளில் பணம் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். சில முக்கிய பொருட்கள் மீது நீங்கள் கொண்டிருந்த ஆசை இப்போது நிறைவேறும். பண வரவுக்கான புதிய வழிகள் திறக்கப்படும். சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்கும். 

துலா ராசி (Libra)

சுக்கிரனின் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். எதிர்பாராத பணப் பலன்களைப் பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கூடும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தேவையற்ற காதல் விவகாரங்களில் இருந்து விலகி இருங்கள், அது உங்கள் நன்மைக்கே. பழைய ஆசை நிறைவேறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்.. முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News